பசுமை பட்டாசுகளை வெடிக்க பெங்., போலீஸ் கமிஷனர் உத்தரவு
பசுமை பட்டாசுகளை வெடிக்க பெங்., போலீஸ் கமிஷனர் உத்தரவு
UPDATED : நவ 01, 2026 12:00 AM
ADDED : அக் 31, 2026 09:54 PM
பெங்களூரு: ‘உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, இரவு 8:00 மணி முதல், 10:00 மணி வரை மட்டுமே பசுமை பட்டாசுகள் வெடிக்க வேண்டும்’ என, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
நகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டு உள்ள அறிக்கை:
தீபாவளிக்கு பசுமை பட்டாசுகளை வாங்கவும.
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி, இரவு 8:00 முதல், 10:00 மணி வரை மட்டுமே பாதுகாப்புடன் பட்டாசுகள் வெடிக்க வேண்டும்
மருத்துவமனை, பெட்ரோல் பங்க், காஸ் நிலையம், வழிபாட்டு தலங்கள், முதியோர் இல்லம், குழந்தைகள் நல மையம் அருகில் வெடிப்பதை தவிர்க்கவும்
பட்டாசு வெடிக்கும் போது கையில் கை உறை, கண்ணாடி அணிந்து கொள்ளுங்கள். தண்ணீர், மணல், தீ பாதுகாப்பு உபகரணங்களை தயார் நிலையில் வைத்து கொள்ளுங்கள்
அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனடியாக 112 அல்லது 108க்கு தொடர்பு கொண்டு மருத்துவ உதவி பெறுங்கள்
சிறு குழந்தைகள் பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்க வேண்டாம். அவர்களின் பாதுகாப்புக்கு பெற்றோர் உடன் செல்ல வேண்டும்
வயதானவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் நலனுக்காக, அதிக ஒலி எழுப்பும் வெடிகளை வெடிக்க வேண்டாம்
பசுமை பட்டாசுகள் வாங்கும்போது, அதில் உள்ள ‘கியூ ஆர் கோடு’ ஸ்கேன் செய்து உறுதிபடுத்தி கொள்ளுங்கள்
தரமான பட்டாசுகள் விற்க உரிமம் பெற்ற கடைகளில் மட்டும் பட்டாசுகளை வாங்கவும்
தீபாவளியின் போது, அனுமதியின்றி விற்கப்படும் கடைகளில் பட்டாசுகளை வாங்க வேண்டாம். அவ்வாறு விற்கப்பட்டால், உடனடியாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையம் அல்லது 112க்கு புகார் தெரிவிக்கலாம்
அதிக ஒலி, காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை வாங்க வேண்டாம்
அதிக கூட்டம் கூடும் இடம், பிரதான சாலைகள், வாகனங்கள் நிறுத்தும் இடம் அருகில் பட்டாசுகளை வெடிக்க கூடாது. திறந்தவெளி மைதானங்கள், கூட்டம் குறைவான இடத்தில் வெடிக்க வேண்டும்
வெடிப்பதால் விலங்குகள் பாதிக்காமல் பார்த்து கொள்ளவும்
பட்டாசு வெடிக்கும் போது பருத்து ஆடைகள் அணியவும்
கையில் பிடித்தபடி பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்
* பட்டாசு வெடித்த பின், அந்த இடத்தை சுத்தம் செய்துவிடுங்கள்
* மாநில அரசு, ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம், போலீஸ் துறை, தீயணைப்பு துறை, சுகாதாரம், மாசு கட்டுப்பாட்டு துறைகளின் வழிகாட்டுதல்களை மனதில் கொண்டு தீபாவளியை கொண்டாடுங்கள்.
மாநில அரசு பட்டாசுகளை வெடிக்க குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயித்து உள்ளது. இதை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அsவர் குறிப்பிட்டு உள்ளார்.
