பெங்., தமிழ் சங்கத்தில் நாளை பட்டிமன்றம், பாட்டரங்கம்
பெங்., தமிழ் சங்கத்தில் நாளை பட்டிமன்றம், பாட்டரங்கம்
UPDATED : அக் 17, 2026 12:00 AM
ADDED : அக் 16, 2026 10:24 PM
பெங்களூரு: கவிஞர் கண்ணதாசனை போற்றும் வகையில், பெங்களூரு தமிழ் சங்கத்தில் நாளை பட்டிமன்றம், பாட்டரங்கம் நடக்க உள்ளது.
பெங்களூரு தமிழ் சங்கத்தின், 343வது ஏரிக்கரை கவியரங்கத்தில், கவியரசர் கண்ணதாசனின் விஞ்சிய புகழுக்குக் காரணம் காதல் பாடல்களே, தத்துவ பாடல்களே’ என்ற தலைப்பில் நாளை மதியம் 3:30 மணிக்கு பட்டிமன்றம் நடக்கிறது.
காதல் பாடல்களே அணியில் அமுத பாண்டியன், வாசுகி, தேன்மொழி; தத்துவ பாடல்கள் அணியில் தனம், கல்யாண குமார், வித்யா ஆகியோர் பங்கேற்கின்றனர். கவிஞர் கே.ஜி.ராஜேந்திரபாபு நடுவராக தலைமை வகிக்கிறார்.
தொடர்ந்து, கவியரசர் கண்ணதாசன் பாடல்களில் காதலும் தத்துவமும் என்ற தலைப்பில் பாட்டரங்கம் நடக்கிறது. தலைவர் கோ.தாமோதரன், செயலர் மு.சம்பத் முன்னின்று நடத்துகின்றனர்.
நிகழ்ச்சிகளில் தமிழ் உறவுகள் பங்கேற்கும்படி சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
