/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
திட்டங்களை அறிவித்தால் மட்டும் போதுமா? அமல்படுத்த வேண்டாமா என மக்கள் கேள்வி!
/
திட்டங்களை அறிவித்தால் மட்டும் போதுமா? அமல்படுத்த வேண்டாமா என மக்கள் கேள்வி!
திட்டங்களை அறிவித்தால் மட்டும் போதுமா? அமல்படுத்த வேண்டாமா என மக்கள் கேள்வி!
திட்டங்களை அறிவித்தால் மட்டும் போதுமா? அமல்படுத்த வேண்டாமா என மக்கள் கேள்வி!
ADDED : ஏப் 06, 2025 07:43 AM

தங்கவயலில் சாலைகள், நடைபாதைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் நடந்து செல்வோர் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
ராபர்ட்சன்பேட்டை பி.எம்.சாலை சுராஜ்மல் சதுக்கம், கீதா சாலை 1 முதல் 6 வது கிராஸ் வரையில் நடைபாதைகளில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதை தடுக்க நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தங்கவயல் போலீஸ் மாவட்டத்தில், இதுவரை போக்குவரத்து போலீஸ் நிலையம் இல்லை. அந்தந்த போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசாரே, போக்குவரத்து பணிகளையும் கவனித்து கொள்கின்றனர். போக்குவரத்து போலீஸ் நிலையம் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை கர்நாடக சட்டசபையில், 20 ஆண்டுகளுக்கு முன் ஒலித்தது. ஆனால், அதை அமல்படுத்தவில்லை.
நகராட்சி பராமரிப்பில் இருந்து வரும் அனைத்து கிராஸ் சாலைகளிலும் நடைபாதைகள் இல்லை. வழிநெடுகிலும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனை தவிர்க்க வலுவான திட்டம் இல்லை.
பிரிட்சர்ட் சாலையில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்த கூடாது; மீறினால் 500 ரூபாய் அபராதம் என்று அறிவித்தனர். அதை அமல்படுத்தவில்லை. புல் மார்க்கெட் பகுதியில் இலவசமாக வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு உள்ளது என அறிவித்தனர். ஆனால், அங்கு எந்த வாகனமும் நிறுத்தப்படுவதில்லை.
ராபர்ட்சன்பேட்டை பஸ் நிலைய வணிக வளாகத்தில் ஒரு பார்க்கிங் வசதி அமைத்துள்ளனர். அதை ஒரு சிலர் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான வாகனங்களை பஸ் நிலையத்தின் முக்கிய பகுதிகளில் நிறுத்துகின்றனர். இதனால், 'திட்டங்களை அறிவித்தால் மட்டும் போதுமா. அமல்படுத்த வேண்டாமா' என, பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
கட்டுப்பாடே இல்லை
ராபர்ட்சன்பேட்டை, ஆண்டர்சன்பேட்டை முக்கிய சாலைகளில் இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி கார்களையும் நிறுத்துகின்றனர். இதனால், வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர். எம்.ஜி.மார்க்கெட்டுக்குள்ளும் கூட ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள் வருகின்றன. இதற்கு கட்டுப்பாடே இல்லை. வாகனங்கள் நிறுத்துவதற்கு நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.கணேஷ் குமார், கவுதம் நகர், தங்கவயல்
வாகன பெருக்கம்
தங்கவயலில் 50 ஆயிரம் வீடுகள் இருப்பதாக தெரிகிறது. குறைந்தபட்சம் 60 ஆயிரம் வாகனங்கள் இருக்கலாம். நடந்து செல்வோர் 10 சதவீதம் கூட இல்லை. வாகன பெருக்கம் அதிகரித்து உள்ளது. ஆனால் ராபர்ட்சன்பேட்டையில் வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாததால் தான் சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. வேறு வழியில்லை. எனவே வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும்.
-வி.பாஸ்கர், சாம்பியன், தங்கவயல்.
பாதுகாப்பு தேவை
உலகில் உருவாகும் அதிநவீன கார்கள் எதுவாக இருந்தாலும் தங்கவயலில் காணலாம். வீட்டுக்கு வீடு வாகனங்கள் உள்ளன. ஆனால், வாகனங்கள் நிறுத்துமிடம் இல்லாத குறை தான் உள்ளது. எல்லா சாலைகளிலும், தெருக்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதை ஒழுங்குபடுத்த போலீசும், நகராட்சியும் இணைந்து செயல்பட வேண்டும். நவீன பார்க்கிங் நிலையம், வாகனங்களுக்கு பாதுகாப்பு அவசியம் தேவை.
என்.செல்வ நாராயண், சுவர்ண குப்பம், ராபர்ட்சன்பேட்டை.
- நமது நிருபர் -