ADDED : நவ 14, 2025 05:23 AM
சாம்ராஜ்நகர்: சாம்ராஜ்நகரில் புலிகள் சுற்றித்திரிவது போல ஏ.ஐ., வீடியோக்கள் இணையத்தில் வெளியானதால் கிராம மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
சாம்ராஜ்நகர் மாவடத்தின் பல கிராமங்களில் புலிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளன. இதனால், வனப்பகுதி ஓரங்களில் வசிக்கும் கிராமத்தை சேர்ந்தவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்த வேளையில் சில அறிவுஜீவிகள் ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புலி கிராமங்களில் சுற்றித்திரிவது போன்ற வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டனர்.
இந்த வீடியோக்களை பலரும் உண்மை என நம்பி, 'வாட்ஸாப்பில் பகிர்ந்து வருகின்றனர். இதனால், சாம்ராஜ்நகரில் வனப்பகுதிக்கு அருகில் வசிக்கும் கிராம மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
புலி உலாவுவது போல போலியான வீடியோக்களை உருவாக்கி, இணையத்தில் வெளியிடும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம். வீடியோக்களை வெளியிட்ட நபர்களை அடையாளம் காணும் பணிகளும் நடந்து வருகிறது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தொழில்நுட்பத்தை நல்ல வழியில் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

