நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகல்கோட்: பைக் மற்றும் பாதசாரி மீது கார் மோதியதில், மூவர் உயிரிழந்தனர்.
பாகல்கோட் மாவட்டம், முதோல் தாலுகாவின், முகளகோடா கிராசில் நேற்று காலை காரொன்று, அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னே சென்ற பைக் மீதும், பாதசாரி மீதும் மோதியது.
பைக்கில் இருந்த கணபதி பத்தி, 42, தபன்குமார் தலாயி, 46, மற்றும் பாதசாரி ஒருவரும் உயிரி ழந்தனர். பாதசாரியின் அடை யாளம் தெரிய வில் லை.
கார் ஓட்டுநர் சுபாஷ் ராமதீர்த்தா காயமடைந்து, சிகிச்சை பெறுகிறார். தகவலறிந்து வந்த, முதோல் போலீசார் மூவரின் உடல்களை மீட்டனர்.

