/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெண்ணிடம் பாலியல் சீண்டல் 'ரேடியாலஜிஸ்ட்' தலைமறைவு
/
பெண்ணிடம் பாலியல் சீண்டல் 'ரேடியாலஜிஸ்ட்' தலைமறைவு
பெண்ணிடம் பாலியல் சீண்டல் 'ரேடியாலஜிஸ்ட்' தலைமறைவு
பெண்ணிடம் பாலியல் சீண்டல் 'ரேடியாலஜிஸ்ட்' தலைமறைவு
ADDED : நவ 14, 2025 05:24 AM

ஆனேக்கல்: 'ஸ்கேன்' சென்டருக்கு வந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெங்களூரு ரூரல் மாவட்டம் ஆனேக்கல் பகுதியை சேர்ந்த 34 வயது பெண், கடந்த 7ம் தேதி ஆனேக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். டாக்டர், அவரை ஸ்கேன் எடுத்து வர சொன்னார். இதனால், கடந்த திங்கட் கிழமை மருத்துவமனைக்கு அருகில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டருக்கு தனது கணவருடன் அப்பெண் சென்றார்.
அப்பெண் ஸ்கேன் எடுக்கும் அறைக்குள் சென்றார். அப்போது, அவரது கணவர் வெளியில் நின்றுகொண்டிருந்தார். ஸ்கேன் சென்டரில் வேலை பார்த்த, 'ரேடியாலஜிஸ்ட்' ஜெயகுமார், பெண்ணின் வயிற்றுப்பகுதியில் ஸ்கேன் செய்யும் போது, அப்பெண்ணின் அந்தரங்க உறுப்பை தொட்டு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால், ஆத்திரம் அடைந்த அப்பெண் கத்தி கூச்சலிட்டு அறையில் இருந்து வெளியேறினார். இது குறித்து தன் கணவரிடம் கூறினார்.
இதற்கு ஜெயகுமார் அப்படி எல்லாம் செய்யவில்லை தன் பணியை மட்டுமே செய்ததாக பதில் கூறினார். இதனால், அப்பெண்ணின் கணவர் மொபைல் போனில் கேமராவை 'ஆன்' செய்து தனது மனைவியிடம் கொடுத்துவிட்டு, ஸ்கேன் செய்யும்போது மறைமுகமாக வீடியோ எடுக்கும்படி அறிவுறுத்தினார்.
இதன்படி, மீண்டும் ஸ்கேன் செய்யப்பட்டது. அப்போதும் ஜெயகுமார் அநாகரீக செயலில் ஈடுபட்டார். இது மொபைல் போனில் எடுக்கப்பட்ட வீடியோவில் பதிவானது. இதை அறிந்த தம்பதி, எதுவும் பேசமால் ஸ்கேன் சென்டரில் இருந்து வெளியேறினர்.
இந்த வீடியோவை ஆதாரமாக வைத்து, அதே நாளில் ஆனேக்கல் போலீஸ் நிலையத்தில் அப்பெண் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதை அறிந்த ஜெயகுமார் தலைமறைவாக உள்ளார். இவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

