பெட்ரோலிய நிறுவனங்கள் விளக்கம்: அமைச்சர் ரிஸ்வான் அர்ஷத் பதிலடி
பெட்ரோலிய நிறுவனங்கள் விளக்கம்: அமைச்சர் ரிஸ்வான் அர்ஷத் பதிலடி
UPDATED : நவ 08, 2026 12:00 AM
ADDED : நவ 07, 2026 09:24 PM

பெங்களூரு: கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க, பெட்ரோலில், 20 சதவீதம் எத்தனால் கலக்கும் முறையை, மத்திய அரசு அமல்படுத்தியது. இது, 'இ - 20' பெட்ரோல் என்று அழைக்கப்படுகிறது.
'கர்நாடகாவில் பெங்களூரு, மங்களூரு, கோலார், சிக்கபல்லாபூர், பெங்களூரு ஊரக பகுதி, பெங்களூரு தெற்கு, துமகூரு ஆகிய ஏழு மாவட்டங்களில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் இருந்து சேகரிக்கப்பட்ட 63 மாதிரிகளில், மத்திய அரசு குறிப்பிட்ட 20 சதவீதத்துக்கும் அதிகமாக பெட்ரோலில் 31 சதவீதம் எத்தனால் கலக்கப்படுவதாக' முதல்வர் சிவகுமார் குற்றம் சாட்டியிருந்தார்.
இதை மறுத்த பெட்ரோல் நிறுவனங்கள், 'நாட்டின் 27 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் பரிசோதிக்கப்பட்ட 893 மாதிரிகளில், 56 மாதிரிகள் கர்நாடகாவை சேர்ந்தவை. அவை அனைத்திலும் எத்தனால் அளவு 19 முதல் 21 சதவீதம் வரை மட்டுமே உள்ளன' என விளக்கம் அளித்துள்ளன.
இதற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் ரிஸ்வான் அர்ஷத், தனது எக்ஸ் தளத்தில், 'உங்களது வெட்டி - நகலெடுத்து, ஒட்டும் பதிலை நாங்கள் கவனித்தோம். தீபாவளி வார இறுதியை கெடுக்க விரும்பவில்லை. திங்கட்கிழமை நாடு தழுவிய அளவில் விரிவான பதில் அளிப்பேன்.
அதுவரை பண்டிகையை கொண்டாடுங்கள். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். அதிகாரபூர்வமற்ற தகவலையோ, ஏதோ அறியப்படாத அமைப்போ அல்ல நாங்கள். நாங்கள் அரசாங்கம்' என குறிப்பிட்டு உள்ளார்.
