தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/மாலையில் வீடு வீடாக குப்பை சேகரிக்க திட்டம்

மாலையில் வீடு வீடாக குப்பை சேகரிக்க திட்டம்

மாலையில் வீடு வீடாக குப்பை சேகரிக்க திட்டம்


UPDATED : அக் 24, 2026 02:44 AM

ADDED : அக் 23, 2026 08:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2026 02:44 AM ADDED : அக் 23, 2026 08:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரில் தினமும் காலை நேரத்தில் வீடு, வீடாக வந்து டிப்பர் ஆட்டோக்கள் மூலம் குப்பை சேகரிக்கப்படுகிறது. இருப்பினும், சிலர் காலையிலேயே வேலைக்குச் சென்று விடுவதால், குப்பையை வாகனத்தில் போட முடியாமல் போகிறது.

இதனால், சிலர் சாலையோரங்களில் குப்பையை வீசுகின்றனர். இதை கருத்தில்கொண்டு, ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம், மாலை நேரத்தில் வீடு, வீடாகச் சென்று குப்பை சேகரிக்க திட்டமிட்டுள்ளது.

முதல் கட்டமாக, பெங்களூரு தெற்கு மாநகராட்சியின் பொம்மனஹள்ளி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஐந்து வார்டுகளில், கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் டிப்பர், ஆட்டோக்கள் மூலம் வீடு, வீடாக சென்று குப்பை சேகரிக்கப்படுகிறது.

இத்திட்டத்திற்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்தால், மொத்தமுள்ள ஐந்து மாநகராட்சிகளிலும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து ஜி.பி.ஏ., தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ் கூறியதாவது:

ஒரு வார்டுக்கு, 25 குப்பை சேகரிக்கும் டிப்பர் ஆட்டோக்கள் உள்ளன. இந்த அனைத்து வாகனங்களும், மாலை நேரத்தில் குப்பை சேகரிக்க செல்ல இயலாது. இதனால், மாலை நேரத்தில் ஒரு வார்டுக்கு இரண்டு அல்லது மூன்று வாகனங்கள் சென்று குப்பை சேகரிக்கும். மாலை 5:00 மணி முதல், நள்ளிரவு 12:00 மணி வரை குப்பை சேகரிக்கப்படும்.

காலையில் சீக்கிரமாக வேலைக்குச் செல்வோர், மாலையில் வரும் வாகனங்களில் குப்பையை கொடுக்கலாம். இது ஒரு முன்னோடி திட்டமாகும். இத்திட்டம் சோதனை ஓட்டமாக தெற்கு மாநகராட்சியில் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு வரவேற்பு கிடைத்தால், அனைத்து மாநகராட்சிகளிலும் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us