/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மின்சாரம் தாக்கி சிறுவன் பலி போலீசார் வழக்கு
/
மின்சாரம் தாக்கி சிறுவன் பலி போலீசார் வழக்கு
ADDED : ஜூன் 23, 2025 09:24 AM
கே.ஆர்., புரம் : பெங்களூரு, கே.ஆர்., புரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் துலாவோர். இவரது மகன் ஆனந்த், 10. கடந்த சில நாட்களுக்கு முன், வீட்டின் மாடியில் விளையாடும் போது, துடைப்பத்தை மின்சார கம்பியின் மீது வைத்தார். மின்சாரம் பாய்ந்ததில் அவர் உயிரிழந்தார்.
சிறுவனின் தாய் கே.ஆர்., புரம் போலீசில் நேற்று புகார் செய்தார். புகாரில், 'சட்டவிரோதமாக வீட்டின் உரிமையாளர் பால்ராஜ், பல மாடி கட்டடம் கட்டி உள்ளார். மின்சார கம்பிகள் தாழ்வான நிலையில் கட்டப்பட்டு பாதுகாப்பற்ற நிலையில் இருந்தது' என்று குறிப்பிட்டு உள்ளார். இது குறித்து, வீட்டு உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.