/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'நோ பார்க்கிங்'கில் போலீஸ் ஜீப் ரூ.500 அபராதம்
/
'நோ பார்க்கிங்'கில் போலீஸ் ஜீப் ரூ.500 அபராதம்
ADDED : ஆக 28, 2025 11:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிக்கமகளூரு: 'நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் ஜீப்புக்கு, போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.
சிக்கமகளூரு மாவட்டம், கொப்பா நகர பஸ் நிலையத்தில், நேற்று மதியம், 'நோ பார்க்கிங்' பகுதியில், போலீஸ் ஜீப் நின்றிருந்தது. என்.ஆர்.புரா போலீஸ் நிலைய போலீசார், அங்கு ஜீப்பை நிறுத்திச் சென்றிருந்தனர்.
இதை கவனித்த கொப்பா போக்குவரத்து போலீசார், ஜீப்புக்கு 'லாக்' போட்டனர். அதன்பின் ஜீப் நிறுத்திய ஏட்டுக்கு, இன்ஸ்பெக்டர் பசவராஜ், 500 ரூபாய் அபராதம் விதித்தார்.