/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அரசியல் பண்டிதர் ராகுல் பிரஹலாத் ஜோஷி கிண்டல்
/
அரசியல் பண்டிதர் ராகுல் பிரஹலாத் ஜோஷி கிண்டல்
ADDED : பிப் 08, 2025 09:16 PM
பெங்களூரு: “லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், அரசியல் பண்டிதர் போன்று பேசுகிறார்,” என மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
டில்லியில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலை, ஒரு கட்சிக்கு நல்லது இல்லை. காங்கிரசை மக்கள் புறக்கணித்துள்ளனர். அக்கட்சித் தலைவர்கள் அதை புரிந்து கொள்ள வேண்டும்.
காங்கிரஸ் தலைவர்களை பொருத்தவரை, அவர்கள் கட்சி வெற்றி பெற்றால், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் சரியாக உள்ளது. தோற்றால் சரியாக இருக்காது. பா.ஜ., வெற்றி பெற்றால், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மீது குற்றஞ்சாட்டுவர்.
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், அரசியல் பண்டிதர் போன்று பேசுகிறார். மின்னணு ஓட்டுப்பதிவு பற்றி விமர்சிக்கிறார். நாட்டில் ஜனநாயகம் வெற்றி அடைய, வலுவான எதிர்க்கட்சி இருக்க வேண்டும். இன்று காங்கிரஸ் பரிதாபமான நிலைக்கு வந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

