
* அமைச்சரின் நிழல்
கர்நாடக அரசுல நகராட்சி நிர்வாகம்னு ஒரு துறை இருக்கா, அதுக்கு அமைச்சர்னு ஒருத்தரு இருக்காரான்னு பலருக்கு தெரியாது. தன் துறையில என்ன நடக்குன்னு கூட தெரியாத அளவுக்கு அப்பாவி. இதனால அவர எதிர்க்கட்சிகாரங்க மட்டும் இல்லாம, ஆளுங்கட்சிகாரங்களும் கிண்டல் அடிக்குறாங்க.
ஆனா அந்த அமைச்சருக்கு நிழலா, வன அமைச்சரு இருக்காரு. இருவரும் ஒரே மாவட்டத்துக்காரங்க. நகராட்சி அமைச்சர யாராவது ஏதாவது சொன்னா, வன அமைச்சருக்கு கோபம் பொத்துகிட்டு வருதாம். நீங்க எல்லாம் ஒழுங்கான்னு கேட்குறாராம். உங்களை மாதிரி ஒருத்தரு இருக்குற வர, என்ன யாரும் அசைக்க முடியாது என்று கூறி வன அமைச்சர் பின்னாடியே சுத்தி வர்றாரு நகராட்சி நிர்வாக அமைச்சரு.
============
* மேலிட பொறுப்பாளர் எங்கே?
கர்நாடக தாமரை கட்சி பொறுப்பாளரா உத்தர பிரதேசத்துக்காரரு இருக்காரு. கடந்த மூணு மாசத்துக்கு முன்னாடி நடந்த, கோர் கமிட்டி கூட்டத்துல வச்சு கனிம மாவட்ட தாடிகாரரை, பொறுப்பாளரு தேவை இல்லாம சீண்டி பார்த்தாரு. இதனால கடுப்பான தாடிகாரரு, கட்சி விட்டு விலகிருவேன்னு சொன்னாரு. கை கட்சியில இருந்து கூப்புடுறாங்கன்னு தம்பட்டம் அடிச்சாரு.
தாடிகாரர் கிட்ட ஏதோ பேசி, தாமரை கட்சி தேசிய தலைவரு சமாதானப்படுத்தி வைச்சு இருக்காரு. இந்த பிரச்னைக்கு அப்புறம் மத்திய அமைச்சர்கள் சிலர், கர்நாடகாவுக்கு அடிக்கடி வந்துட்டு போயிட்டாங்க. ஆனா, பொறுப்பாளர் இந்த பக்கமே வரல. என்ன தான் பிரச்னை இருந்தாலும், பொறுப்பாளரு வராம இருக்கலாமா. அவரு மீண்டும் வரணும்னு தொண்டர்கள் பேசுறாங்க.
===========
* எல்லாம் வெறும் பேச்சு தானா?
பொம்மைகளுக்கு பெயர் பெற்ற தொகுதிக்கு போன வருஷம் இடைத்தேர்தல் நடந்துச்சு. புல்லுக்கட்டு கட்சி சார்புல, தொட்டகவுடர் பேரன் சினிமாகாரரு போட்டியிட்டாரு. பேரனுக்காக தொட்டகவுடரே களத்துல இறங்கி பிரசாரம் பண்ணுனாரு. ஆனாலும் சினிமாகாரரு தோத்து போனாரு.
'நான் தோல்வி அடைஞ்சத நினைச்சு கவலைப்பட மாட்டேன். வாரத்துல ஒரு நாள் தொகுதிக்கு வந்து, மக்கள் பிரச்னைகளை கேட்பேன்'னு சொன்னாரு. ஆனா தொகுதிக்கு பக்கமே அவர் போறது இல்ல. எல்லாம் பேச்சு தானா, செயல்ல ஒண்ணும் கிடையாதான்னு சினிமாகாரரை, கை கட்சிக்காரங்க விமர்சனம் பண்ணுறாங்க. தேர்தல் நேரத்துல சினிமாகாரரு கண்ணீர் கூட வடிச்சாரு. கிளிசரின் போட்டுட்டு வந்துருப்பார்னு கிண்டல் அடிக்குறாங்க.
***

