தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ராகுல் மீது வழக்கு பதிவானதற்கு அரசியலே காரணம்: சிவகுமார்

 ராகுல் மீது வழக்கு பதிவானதற்கு அரசியலே காரணம்: சிவகுமார்

 ராகுல் மீது வழக்கு பதிவானதற்கு அரசியலே காரணம்: சிவகுமார்


ADDED : செப் 01, 2026 08:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2026 08:03 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''அரசியல் காரணங்களால் மட்டுமே, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது,'' என, முதல்வர் சிவகுமார் கூறினார்.

உத்தரகண்ட் மாநிலம் நைனிடாலில், காங்கிரஸ் தலைவர் கார்கே பங்கேற்ற பொதுக்கூட்டத்திற்கு பிறகு, அந்த மைதானத்தில் ஸ்ரீ ராம் சேனா தர்மார்த்த சேவா நியாஸ் அமைப்பினர் சுத்திகரிப்பு யாகம் நடத்தினர்.

லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், சுத்திகரிப்பு யாகம் என்ற பெயரில் தலித் சமூகத்தை சேர்ந்த கார்கேவை வேண்டுமென்ற அவமதித்து விட்டனர். சம்பந்தப்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய கோரினார்.

இச்சம்பவத்தை குறிப்பிடும் போது, ராகுல் தலித் சமூகத்தினரை அவதுாறாக பேசியதாக, ஸ்ரீ ராம் சேனா தர்மார்த்த சேவா நியாஸ் அமைப்பினர், ஹல்த்வானி கோட்வாலி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.ராகுல் மீது கடந்த, 30ம் தேதி எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டது.

இது குறித்து, முதல்வர் சிவகுமார் நேற்று பேசியதாவது:

ராகுல் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டதன் பின்னணியில் முழுக்க முழுக்க அரசியலே இருக்கிறது.நியாயமான முறையில் வழக்குப்பதிவு செய்யவில்லை. இந்த விவகாரத்தில் நாங்கள் அனைவரும் ராகுலுக்கு உறுதுணையாக இருக்கிறோம்.

அவர், தேசத்திற்காகவும், இளைஞர்களுக்காகவும் போராடுகிறார்.போராட்டம் நடத்துவது அவருடைய பிறப்புரிமை மட்டுமல்ல;அரசியலமைப்பு உரிமை. இதை யாரும் தடுக்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us