/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சித்தராமையா பற்றி விமர்சனம் பி.ஆர்.பாட்டீல் சமாளிப்பு
/
சித்தராமையா பற்றி விமர்சனம் பி.ஆர்.பாட்டீல் சமாளிப்பு
சித்தராமையா பற்றி விமர்சனம் பி.ஆர்.பாட்டீல் சமாளிப்பு
சித்தராமையா பற்றி விமர்சனம் பி.ஆர்.பாட்டீல் சமாளிப்பு
ADDED : ஜூலை 02, 2025 11:12 PM

பெங்களூரு: 'சித்தராமையா உடனான எனது உறவை கெடுக்க சிலர் சதி செய்கின்றனர்' என, பி.ஆர்.பாட்டீல் கூறி உள்ளார்.
வீட்டு வசதித் துறையில் லஞ்சம் வாங்கிக் கொண்டு வீடுகளை, பயனாளிகளுக்கு ஒதுக்குவதாகக் கூறி, கலபுரகி ஆலந்த் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பி.ஆர்.பாட்டீல் பரபரப்பை ஏற்படுத்தினார். கடந்த 1ம் தேதி கட்சியின் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவை சந்தித்து, தனக்கு உள்ள குறைகளை கூறினார்.
நேற்று முன்தினம் பி.ஆர்.பாட்டீல், யாரிடமோ, மொபைல் போனில் பேசிய வீடியோ வெளியானது. 'சித்தராமையா மிகவும் அதிர்ஷ்டசாலி. அதிர்ஷ்டத்தால் முதல்வராகிவிட்டான். அவனை சோனியாவிடம் அறிமுகப்படுத்தியதே நான் தான்' என, ஒருமையில் பேசி இருந்தார். இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு விளக்கம் அளித்து பி.ஆர்.பாட்டீல் நேற்று வெளியிட்ட வீடியோ:
முதல்வர் சித்தராமையா பற்றி நான் பேசியதை, ஊடகங்கள் திரித்து வெளியிட்டுள்ளன. கே.ஆர்.பேட்டையில் வைத்து எனது நெருங்கிய நண்பரிடம் மொபைல் போனில் பேசியபோது, சித்தராமையாவை பற்றி பேசினேன். அவர் அதிர்ஷ்டத்தால் முதல்வர் ஆனவர் என்று சொன்னேன். ஆனால், அவரை சோனியாவிடம் அழைத்துச் சென்றது நான் தான் என்று கூறவே இல்லை.
ம.ஜ.த.,வில் இருந்து நான் உட்பட ஒன்பது எம்.எல்.ஏ.,க்கள் வெளியேறி, சித்தராமையா தலைமையில் காங்கிரசில் இணைந்தோம். சித்தராமையாவுக்கு இருந்த மக்கள் ஆதரவை பார்த்து, கட்சி மேலிடம் அவரை முதல்வர் ஆக்கியது. நானும், சித்தராமையாவும் நண்பர்கள். அவருடனான எனது உறவை கெடுக்க, சிலர் சதி செய்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.