/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு தடை பிரியங்க் கார்கே அதிரடி
/
ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு தடை பிரியங்க் கார்கே அதிரடி
ADDED : ஜூலை 01, 2025 03:45 AM

பெங்களூரு: ''மத்தியில் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்தால், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை முற்றிலுமாக தடை செய்வோம்,'' என, மாநில தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்தார்.
பெங்களூரில் அவர் நேற்று அளித்த பேட்டி:
பாடப்புத்தகங்களில் மதச்சார்பின்மையையும், அரசியலமைப்பில் இருந்து சோஷலிசத்தையும் நீக்கும்படி ஹொசபெலே கூறுகிறார். எந்த பள்ளியில் அவர் படித்து வந்தார்? ஆர்.எஸ்.எஸ்., பின்னணியில் இருந்து வந்தவர்.
ஆர்.எஸ்.எஸ்., உருவாகிய நாளில் இருந்தே அவர்களுக்கு, மதச்சார்பின்மை, சம உரிமை, சோசலிசம் என்றால் 'அலர்ஜி'. ஆரம்பத்தில் இருந்தே அவர்களின் கொள்கையை எதிர்த்து வருகிறோம்; தொடர்ந்து எதிர்ப்போம்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, இரண்டு முறை தடை செய்தோம். எங்களிடம் கெஞ்சிக் கேட்டதால் தடையை நீக்கினோம். மீண்டும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஆர்.எஸ்.எஸ்.,க்கு தடை விதிக்கப்படும்.
இந்தியாவில் ஒரு மதம் இருக்க வேண்டும் என்பது தான் அவர்களின் கொள்கை. நாங்கள் அரசியலமைப்பின்படி பணியாற்றுவோம். அம்பேத்கர் என்ன கூறினார் என்பதை அவர்கள் படித்து பார்க்கட்டும். மக்களின் விருப்பப்படி, மாற்றம் அவசியம்.
அரசியலமைப்பு பற்றி அவர்களுக்கு தெரியுமா? இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காதவர்கள், தங்களின் சொந்த வரலாற்றை உருவாக்க தயாராக உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.