/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாணவியுடன் ஓடிய பேராசிரியர் கைது
/
மாணவியுடன் ஓடிய பேராசிரியர் கைது
ADDED : ஆக 15, 2025 05:11 AM
தேவனஹள்ளி: தன்னிடம் படித்த மாணவியை, இழுத்து கொண்டு ஓடிய கல்லுாரி பேராசிரியரை, போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூரில் வசிப்பவர் பிரவீண், 45. இவர் தொட்டபல்லாபூர் நகரில் உள்ள கொன்டாடியப்பா கல்லுாரியில், கன்னட பேராசிரியராக பணியாற்றுகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இவர் இதே கல்லுாரியில் படிக்கும் மாணவியுடன், கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இதையறிந்த மாணவியின் பெற்றோர், மகளை கண்டித்தனர். மகளுக்கு உடனடியாக வரன் பார்த்து, திருமணமும் நிச்சயம் செய்துள்ளனர். இதனால் பிரவீண், ஆகஸ்ட் 2ம் தேதியன்று, மாணவியை அழைத்து கொண்டு, ஊரை விட்டு ஓடினார். முதலில் டில்லிக்கு சென்றனர்.
சில நாட்கள் அங்கிருந்த பின், மைசூரு, நஞ்சன்கூடுக்கு வந்தனர். இங்குள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்தனர். மகள் காணாமல் போனது குறித்து, மாணவியின் பெற்றோரும், கணவர் காணாமல் போனது குறித்து, பேராசிரியரின் மனைவியும் தொட்டபல்லாபூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
போலீசாரும் பல கோணங்களில் விசாரணை நடத்தி, மாணவியுடன், லாட்ஜில் பேராசிரியர் தங்கியிருப்பதை கண்டுபிடித்தனர். நேற்று மதியம் நஞ்சன்கூடுக்கு சென்று, அவரை கைது செய்தனர். மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.