/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாணவியை மிரட்டி பலாத்காரம்: 'போக்சோ'வில் பேராசிரியர் கைது
/
மாணவியை மிரட்டி பலாத்காரம்: 'போக்சோ'வில் பேராசிரியர் கைது
மாணவியை மிரட்டி பலாத்காரம்: 'போக்சோ'வில் பேராசிரியர் கைது
மாணவியை மிரட்டி பலாத்காரம்: 'போக்சோ'வில் பேராசிரியர் கைது
ADDED : டிச 01, 2025 05:24 AM
பெலகாவி: பெலகா வி நகரில் உள்ள தனியார் கல்லுாரி ஒன்றில் கவுரவ பேராசிரியராக பணியாற்றி வருபவர் நாகேஸ்வர், 50. இவர் இதே கல்லுாரியில் படிக்கும், 19 வயது மாணவியை தன் வலையில் சிக்க வைத்து, இச்சைக்கு பலியாக்கியுள்ளார்.
மாணவியை பலாத்காரம் செய்வதற்காகவே, பெலகாவியின், கணேசபுராவில் வாடகைக்கு வீடு எடுத்திருந்தார். அவ்வப்போது மாணவியை, பலவந்தமாக இங்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்துள்ளது. இது பற்றி யாரிடமும் கூறக்கூடாது. மீறினால் கொலை செய்வதாக மிரட்டினார். இதனால், மாணவி தன் பெற்றோரிடமும் கூற பயந்தார்.
இதற்கிடையே நாகேஸ்வரின் தொந்தரவு அதிகரித்தது. தன்னுடன் லிவிங் இன் ரிலேசன்ஷிப்பில் இருக்க வேண்டும். தான் அழைக்கும் இடத்துக்கு வர வேண்டும் என, நெருக்கடி கொடுத்தார். இதனால் வேறு வழியின்றி, தன் பெற்றோரிடம் நடந்ததை மாணவி கூறினார்.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பேராசிரியர் நாகேஸ்வர் மீது, பெலகாவியின், கேம்ப் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். நாகேஸ்வர் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிவாகியுள்ளது.

