/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மூடப்பட்ட சுரங்கங்கள் சுற்றுலா தலமாக்க திட்டம்
/
மூடப்பட்ட சுரங்கங்கள் சுற்றுலா தலமாக்க திட்டம்
ADDED : ஆக 11, 2025 04:33 AM
பெங்களூரு: சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கோலாரின் பாரத் கோல்டு மைன்ஸ், ராய்ச்சூரின் ஹட்டி கோல்டு மைன்ஸ் இடங்கள், பல்லாரியில் மூடப்பட்ட சில சுரங்க இடங்களை, சுற்றுலா தலங்களாக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. சுரங்க இடங்களை பட்டியலிடும் பணி நடக்கிறது.
திட் டத்தை செயல்படுத்த வனத்துறை, சுரங்கம், நில ஆய்வியல் துறை, சுற்றுச்சூழல் துறை உட்பட சில துறைகளின் அனுமதி தேவை. மூடப்பட்ட சுரங்கங்களை சுற்றுலா தலமாக மேம்படுத்துவது குறித்து, திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய, மாநில அரசிடம் தாக்கல் செய்யப்படும். அரசுகள் அனுமதி கிடைத்தவுடன், பணிகளை துவக்குவோம், நடப்பாண்டு இறுதிக்குள், சுரங்க பகுதிகளை சு ற்றுலா தலமாக்க, இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
கடந்த 2024ல் வனத்துறை, 2024 - 2029 சுற்றுலா கொள்கைக்கு ஒப்புதல் அளித்தது. இதில் சுரங்கங்களை சுற்றுலா தலமாக்கும் அம்சமும் ஒன்றாகும். அன்றிலிருந்து, சுற்றுலா தலமாக்க தகுதியான சுரங்கப்பகுதிகளை அடையாளம் காணும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.