/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
உணவு, உடை கொடுப்பதும் வளர்ச்சி தான் காங்.,- எம்.எல்.ஏ., லட்சுமண் சவதி கருத்து
/
உணவு, உடை கொடுப்பதும் வளர்ச்சி தான் காங்.,- எம்.எல்.ஏ., லட்சுமண் சவதி கருத்து
உணவு, உடை கொடுப்பதும் வளர்ச்சி தான் காங்.,- எம்.எல்.ஏ., லட்சுமண் சவதி கருத்து
உணவு, உடை கொடுப்பதும் வளர்ச்சி தான் காங்.,- எம்.எல்.ஏ., லட்சுமண் சவதி கருத்து
ADDED : ஜூலை 09, 2025 06:42 AM

பெங்களூரு : “ஊருக்கு சாலை அமைப்பதை விட, ஏழையின் வயிற்றுக்கு உணவும், உடலுக்கு உடையும் அவசியம்,” என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., லட்சுமண் சவதி தெரிவித்தார்.
கர்நாடக காங்கிரஸ் அரசு செயல்படுத்திய வாக்குறுதி திட்டங்களால், மாநிலத்தின் பொருளாதாரம் சீர்குலைகிறது. மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பின்னடைவு ஏற்படுகிறது என, பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களும் கூட, வாக்குறுதி திட்டங்களுக்கே பெரும் பகுதி தொகை செலவிடப்படுகிறது. எங்கள் தொகுதிக்கு மேம்பாட்டு நிதி கிடைக்கவில்லை என, பகிரங்கமாகவே புலம்புகின்றனர்.
இலவச திட்டங்களை பற்றி, மறு பரிசீலனை செய்ய வேண்டும் என, வலியுறுத்துகின்றனர். சில நாட்களுக்கு முன்பு முதல்வரின் நிதி ஆலோசகர் பசவராஜ் ராயரெட்டி, 'சாலைகள் வேண்டுமானால், வாக்குறுதி திட்டங்கள் கிடைக்காது. இலவச அரிசி உட்பட, அனைத்தும் நிறுத்தப்படும். இந்த பணத்தை பயன்படுத்தி சாலைகள் அமைப்போம்' என கூறினார். இது பெரும் சர்ச்சைக்கு காரணமானது.
அதேபோன்று, பெலகாவியில் ரம்பாபுரி மடத்தின், வீர சோமேஸ்வர சுவாமிகளும், 'இன்றைய அரசுகள் அளிக்கும் இலவச திட்டங்கள், மக்களை சோம்பேறிகளாக்குகின்றன.
இலவசங்களால் மக்களின் வாழ்க்கை உயராது. அவர்களுக்கு உழைக்கும் ஆர்வம் குறைந்து, சோம்பேறித்தனம் அதிகரிப்பது வருத்தமான விஷயமாகும்' என கருத்து தெரிவித்தார்.
இதுகுறித்து, காங்., - எம்.எல்.ஏ., லட்சுமண் சவதி, நேற்று அளித்த பேட்டி:
ரம்பாபுரி என்ன அர்த்தத்தில், அப்படி கூறினார் என்பது தெரியவில்லை. ஆனால் உழைக்கும் வர்க்கத்தினர் நலனுக்காக, மாநில அரசு வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்தியது.
சாலை அமைப்பது, சாக்கடைகள் சீரமைப்பது, பெரிய, பெரிய கட்டடங்கள் கட்டுவது மட்டுமே வளர்ச்சி அல்ல.
பசித்த வயிற்றுக்கு உணவு, உடை கொடுப்பதும் வளர்ச்சி தான். ஏழைகள் நாள் முழுதும் உழைத்தாலும், வயிறு நிரம்ப உண்ண முடிவதில்லை. இதை எங்கள் அரசு வழங்கினால், அது தவறா? இந்த விஷயத்தில் தேவையற்ற விவாதம் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.