/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கெம்பே கவுடா லே - அவுட் விரிவாக்கம் 9,000 ஏக்கர் கையகப்படுத்த பி.டி.ஏ., முடிவு
/
கெம்பே கவுடா லே - அவுட் விரிவாக்கம் 9,000 ஏக்கர் கையகப்படுத்த பி.டி.ஏ., முடிவு
கெம்பே கவுடா லே - அவுட் விரிவாக்கம் 9,000 ஏக்கர் கையகப்படுத்த பி.டி.ஏ., முடிவு
கெம்பே கவுடா லே - அவுட் விரிவாக்கம் 9,000 ஏக்கர் கையகப்படுத்த பி.டி.ஏ., முடிவு
ADDED : ஆக 02, 2025 01:44 AM
பெங்களூரு: பெங்களூரு கெம்பே கவுடா லே - அவுட் விரிவாக்க பணிக்காக 17 கிராமங்களில் 9,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த, பி.டி.ஏ., முடிவு செய்துள்ளது.
பி.டி.ஏ., எனும் பெங்களூரு மேம்பாட்டு ஆணையம், கொடிகேஹள்ளியில் கெம்பே கவுடா லே - அவுட்டில் வீட்டுமனைகள் அமைக்கும் பணியை 2010ல் இருந்து மேற்கொண்டு வருகிறது.
லே - அவுட் அமைக்கும் பணிக்கு 4,040 ஏக்கர் நிலம் இருப்பதாக பி.டி.ஏ., கூறினாலும், இதுவரை 2,200 ஏக்கர் நிலத்தை மட்டுமே கையகப்படுத்தி உள்ளது.
லே - அவுட்டில் இதுவரை 50 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டு உள்ளன. சில வீடுகளின் கட்டுமான பணிகள் நடக்கின்றன. இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கெம்பே கவுடா லே - அவுட்டை விரிவாக்கம் செய்யும் பணியில், பி.டி.ஏ., மும்முரமாக இறங்கி உள்ளது.
லே - அவுட் விரிவாக்க பணிக்காக நைஸ் சாலையில் உள்ள மைசூரு சாலை - மாகடி சாலைக்கு இடையில் மாலிகொண்டனஹள்ளி; ராமோஹள்ளி; சிக்கலுார் - ராமபுரா; சிக்கலுார் - வெங்கடபுரா; சிக்கலுார்; கொல்லுார்.
கொல்லுார் - நஞ்சுண்டபுரா; கொல்லுார் - குருநாயக்கபுரா; கேட்டோஹள்ளி, கேடோஹள்ளி, கொடிகேஹள்ளி, ஷீகேஹள்ளி, தாவரகெரே, முத்தினபாளையா, கன்னிமினிகே, சேஷகிரிபுரா, நரசிபுரா என, 17 கிராமங்களில் 9,000 ஏக்கர் நிலத்தை பி.டி.ஏ., அடையாளம் கண்டுள்ளது.
இந்த நிலங்களை கையகப்படுத்தவும் முடிவு செய்துள்ளது.
இந்த நிலத்தை ஆய்வு செய்து, வரைபடம், விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கும்படி நில அளவை துறை அதிகாரிகளுக்கு, பி.டி.ஏ., உத்தரவிட்டுள்ளது. ஆனால் லே - அவுட் விரிவாக்க பணிகளுக்கு, பொதுமக்களிடம் இருந்து எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.
ஏற்கனவே கையப்படுத்தப்பட்ட இடங்களில் இன்னும் வீடுகள் ஒழுங்காக கட்டவில்லை. பணிகள் வெவ்வேறு நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டாலும் யாரும் வேலையை ஒழுங்காக செய்யவில்லை.
நிலைமை இப்படி இருக்கும்போது லே - அவுட்டை விரிவாக்கம் செய்வது தேவையா என, பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.