/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நாளை போராட்டம் நடத்தும் ராகுல் சலவாதி நாராயணசாமி சரமாரி கேள்வி
/
நாளை போராட்டம் நடத்தும் ராகுல் சலவாதி நாராயணசாமி சரமாரி கேள்வி
நாளை போராட்டம் நடத்தும் ராகுல் சலவாதி நாராயணசாமி சரமாரி கேள்வி
நாளை போராட்டம் நடத்தும் ராகுல் சலவாதி நாராயணசாமி சரமாரி கேள்வி
ADDED : ஆக 04, 2025 05:25 AM

பெங்களூரு: 'லோக்சபா தேர்தலில் முறைகேடு நடந்திருந்தால், ராகுல் எதிர்க்கட்சி தலைவர் ஆகியிருக்க முடியுமா' என்று, மேல்சபை பா.ஜ., தலைவர் சலவாதி நாராயணசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
கர்நாடக காங்கிரசில் பல 'ஸ்கிரிப்ட்' எழுத்தாளர்கள் உள்ளனர். அவர்கள் பேச்சை கேட்டு கர்நாடகாவுக்கு நடிக்க வரும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை வரவேற்கிறேன்.
தயவு செய்து நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கொடுங்கள். இல்லாவிட்டால் எதிர்க்கட்சி தலைவராக தொடர நீங்கள் தகுதியற்றவர் என்பது தெளிவாக தெரிந்து விடும்.
பல தேர்தல்களில் அம்பேத்கரை தோற்கடிக்க, காங்கிரஸ் கட்சி முயற்சிக்கவில்லையா. உங்கள் கட்சியால் அம்பேத்கருக்கு கிடைத்த அவமானங்கள் பின்னணியில், உங்கள் நிலைப்பாடு என்ன. கடந்த 1975ல் இந்திரா, நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட காரணம் என்ன.
ராகுல் சொல்வது போல, லோக்சபா தேர்தலில் முறைகேடு நடந்திருந்தால், அவரால் எதிர்க்கட்சி தலைவர் ஆகியிருக்க முடியுமா. கர்நாடகாவில் எஸ்.சி., - எஸ்.டி., சமூகத்திற்கு ஒதுக்கப்பட்ட 39,000 கோடி ரூபாயை உங்கள் அரசு திருடி உள்ளது.
இதை எதிர்த்து எப்போது போராடுவீர்கள். வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த ஊழலுக்கு எதிராக எப்போது போராடுவீர்கள். மைசூரு முடா முறைகேடு குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன.
விவசாயிகள், அதிகாரிகள் தற்கொலைக்கு உங்கள் பதில் என்ன. சின்னசாமி மைதானம் முன்பு கூட்ட நெரிசலில் 11 பேர் இறந்தது பற்றி எப்போது பேசுவீர்கள். ஒரு சமூகத்தினரை திருப்திபடுத்தும் அரசியலால் மாநில பொருளாதாரம் சரிந்து உள்ளது.
இதற்கு எதிராக உங்கள் போராட்டம் எப்போது. சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கு எதிராக போராடுவது எப்போது.
மேற்கண்ட என் கேள்விகளுக்கு ராகுல் முறையாக பதில் அளிக்க வேண்டும். உங்களுக்கு உண்மையிலேயே போராடும் குணம் இருந்தால், உங்கள் கட்சியின் இரட்டை நிலைப்பாட்டிற்கு எதிராக குரல் கொடுங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.