நவம்பர் 1 முதல் 5 வரை மழை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
நவம்பர் 1 முதல் 5 வரை மழை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
UPDATED : நவ 01, 2026 12:00 AM
ADDED : அக் 31, 2026 09:02 PM
பெங்களூரு: கர்நாடகாவில் வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. நவம்பர் 1 முதல், 5ம் தேதி வரை, பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் கூறியதாவது:
நவம்பர் 1 முதல், 5ம் தேதி வரை கர்நாடகாவில், பரவலாக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் அறிகுறி தென்படுகிறது. ஆங்காங்கே இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும். சில மாவட்டங்களில் மணிக்கு 30 முதல், 40 கி.மீ., வேகத்தில், பலத்த காற்று வீசும் வாய்ப்புள்ளது.
பெங்களூரு, மைசூரு, மாண்டியா, ஹாசன், குடகு உட்பட, பல பகுதிகளில் சாதாரண மழை பெய்யலாம். நவம்பர் 1ல், உடுப்பி மற்றும் உத்தர கன்னடா மாவட்டங்களில், கன மழை பெய்யும். தட்சிண கன்னடாவில் வறண்ட வானிலை நிலவும். நவம்பர் 3 முதல் 5 வரை, கன மழை பெய்யக்கூடும்.
பெலகாவி, தார்வாட், ராய்ச்சூர், கதக், கொப்பால் மாவட்டங்களில், நவம்பர் 2ல், மணிக்கு 30 முதல், 40 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும். பாகல்கோட், விஜயபுரா, பீதர், கலபுரகி, ஹாவேரி, யாத்கிர் மாவட்டங்களில், வறண்ட வானிலை இருக்கும்.
மைசூரு, மாண்டியா, ஹாசன், குடகு, சிக்கமகளூரு, சாம்ராஜ்நகர், ராம்நகர் மாவட்டங்களில், பலத்த காற்றுடன் கூடிய, சாதாரண மழை பெய்யும். அன்றைய தினம் பெங்களூரு நகர், பெங்களூரு ரூரல், கோலார், சிக்கபல்லாபூர் பகுதிகளில், பலத்த மழை பெய்யும். துமகூரு, பல்லாரி, ஷிவமொக்கா, சித்ரதுர்கா, தாவணகெரே மாவட்டங்களில் வறண்ட நிலை நீடிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
