தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ராஜஸ்தான் தப்பியோடிய திருடன் கைது: ரூ.3 கோடி நகைகள் மீட்பு

 ராஜஸ்தான் தப்பியோடிய திருடன் கைது: ரூ.3 கோடி நகைகள் மீட்பு

 ராஜஸ்தான் தப்பியோடிய திருடன் கைது: ரூ.3 கோடி நகைகள் மீட்பு


ADDED : மார் 11, 2026 05:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2026 05:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எலஹங்கா: திருட்டு வழக்கில் ராஜஸ்தான் வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வைர நகைகள் மீட்கப்பட்டன.

பெங்களூரு எலஹங்கா ஜுடிசியல் லே - அவுட்டை சேர்ந்தவர் பிரகாஷ் முனியப்பா. தொழில் அதிபர். இவரும், இவரது மனைவி லலானாவும் தற்போது அமெரிக்காவில் வசிக்கின்றனர். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பெங்களூரு வருவர்.

கடந்த மாதம் 15ம் தேதி பிரகாஷ் முனியப்பா வீட்டின் மொட்டை மாடி கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், பீரோவை உடைத்து அதில் இருந்த தங்கம், வைர நகைகளை திருடி சென்றனர். கதவு உடைக்கப்பட்டு இருப்பது பற்றி, பிரகாஷுக்கு, அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்தனர்.

அமெரிக்காவில் இருந்தபடியே மொபைல் போனுடன் இணைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அவர் பார்த்த போது, முகமூடி அணிந்த ஒருவர் மட்டும் கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது. பிரகாஷ் உறவினர் சேது மாதவ் அளித்த புகாரில், எலஹங்கா போலீசார் விசாரித்தனர்.

பிரகாஷ் வீட்டின் அருகில் புதிதாக கட்டப்படும் வீட்டில், டைல்ஸ் பதிக்கும் பணி நடக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 20 பேர் அங்கு வேலை செய்கின்றனர். சந்தேகத்தின்படி அவர்களை பிடித்து விசாரித்த போது, ராஜஸ்தானின் சாலம்பர் மாவட்டம் ஜிங்கலா கிராமத்தின் வேலாராம் மீனா என்கிற சுனில், 19, திடீரென வேலையில் இருந்து நின்றது தெரிந்தது.

சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தான் சென்ற எலஹங்கா போலீசார், உள்ளூர் போலீசார் உதவியுடன், வேலாராம் மீனாவை கடந்த 8ம் தேதி கைது செய்தனர்.

வீட்டில் பதுக்கி வைத்திருந்த தங்கம், வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன்மதிப்பு 3 கோடி ரூபாய். பிரகாஷ் வீட்டில் மட்டுமின்றி பல வீடுகளிலும் இவர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.

5 பேர் கைது பெங்களூரு பனசங்கரி 2வது ஸ்டேஜில் வசிப்பவர் கோபி ரவிசந்திரன். ஐ.டி., ஊழியர். கடந்த மாதம் 8 ம் தேதி குடும்பத்தினருடன் தமிழகம் சென்றிருந்தார். இதனை பயன்படுத்தி கொண்ட மர்மநபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.

பீரோ, அலமாரி, ரகசிய அறையில் வைக்கப்பட்டிருந்த 900 கிராம் தங்க நகைகள், இரண்டு வைர நெக்லஸ்கள், 110 கிராம் பிளாட்டினத்தை கொள்ளையடித்து சென்றனர். கோபி ரவிசந்திரன் அளித்த புகாரில், பனசங்கரி போலீசார் விசாரித்தனர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில், கடந்த 7ம் தேதி எலஹங்கா ரயில் நிலையத்தில், ஆந்திராவின் லிகித், 23 கைது செய்யப்பட்டார்.

இவர் கொடுத்த தகவலின்படி, பெங்களூரு வஜ்ரஹள்ளியின் ரகு, 25, தியாகராஜ நகரின் மிதுன், 22, பனசங்கரி முதல் ஸ்டேஜில் வசிக்கும் புனித், 34, நந்தி, 19 ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கொள்ளையடித்த நகைகள் பனசங்கரி, காட்டன்பேட்டை, எலஹங்காவில் உள்ள நகை கடைகள், கைதானவர்கள் வீடுகளில் இருந்து மீட்கப்பட்டன. இதன் மதிப்பு 1.26 கோடி ரூபாய். திருட்டு நகைகளை வாங்கிய, நகை கடை உரிமையாளரிடமும் விசாரணை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us