/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரன்யாவுக்கு கணவர் 'ஷாக்' ; விவாகரத்து கேட்டு மனு
/
ரன்யாவுக்கு கணவர் 'ஷாக்' ; விவாகரத்து கேட்டு மனு
ADDED : ஏப் 03, 2025 08:03 AM

பெங்களூரு : தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, நடிகை ரன்யா ராவுக்கு அவரது கணவர் ஜதின் ஷாக் கொடுத்துள்ளார். விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கன்னட நடிகை ரன்யா ராவ், 33. துபாயில் இருந்து 12 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்திய வழக்கில் கைதானார். தற்போது பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார்.
பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு, செஷன்ஸ் நீதிமன்றங்கள் அவருக்கு ஜாமின் மறுத்தன. இதனால், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
ரன்யாவுக்கு ஷாக் கொடுக்கும் வகையில், விவாகரத்து கேட்டு பெங்களூரு சாந்திநகரில் உள்ள, குடும்ப நல நீதிமன்றத்தில் நேற்று அவரது கணவர் ஜதின் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
திருமணம் ஆனதில் இருந்தே, ரன்யாவுக்கும், ஜதினுக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. தற்போது தங்கம் கடத்தல் சிக்கி குடும்ப மானத்தை வாங்கியதால், ரன்யாவை விவாகரத்து செய்ய ஜதின் முடிவு செய்துள்ளார்.