UPDATED : நவ 02, 2026 12:00 AM
ADDED : நவ 01, 2026 08:04 PM

பெலகாவி: ஒரு டன் கரும்புக்கு, 3,500 ரூபாய் வரை வழங்க பெலகாவியில் உள்ள சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் தயாராக இருப்பதாக, அம்மாவட்ட பொறுப்பு அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி கூறியுள்ளார்.
நேற்று அவர் அளித்த பேட்டி:
கரும்பு விவசாயிகள் பிரச்னைகள் குறித்து, முதல்வர் சிவகுமார் தலைமையில் சமீபத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இருப்பினும், கரும்பு விவசாயிகளுக்கும், சர்க்கரை ஆலை உரிமையாளர்களுக்கும் இடையே குழப்பம் நீடிக்கிறது. இப்பிரச்னை மாநில அரசின் அதிகார வரம்பிற்குள் வராது. இப்பிரச்னையில் மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும்.
சில திட்டங்களுக்கு மத்திய அரசு போதுமான நிதியை விடுவிக்கவில்லை. இதனால், மாநில அரசு நிதியுதவி செய்ய வேண்டிய நிலை உள்ளது.
கரும்பு விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து, சர்க்கரை ஆலை உரிமையாளர்களிடம் பேச்சு நடத்தினேன். அவர்கள், ஒரு டன் கரும்புக்கு 3,500 ரூபாய் வரை வழங்க தயாராக இருக்கின்றனர்.
எனவே, இப்பிரச்னையில் விவசாயிகளின் நலன், ஆலை உரிமையாளர்களின் நலன் ஆகியவற்றை கருதி, மத்திய அரசு சுமூகமாக முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
