தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/செப்., 18ம் தேதி துளு தினம் ஆண்டுதோறும் கொண்டாட்டம்

செப்., 18ம் தேதி துளு தினம் ஆண்டுதோறும் கொண்டாட்டம்

செப்., 18ம் தேதி துளு தினம் ஆண்டுதோறும் கொண்டாட்டம்


UPDATED : நவ 02, 2026 12:00 AM

ADDED : நவ 01, 2026 09:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2026 12:00 AM ADDED : நவ 01, 2026 09:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மங்களூரு: ''ஆண்டுதோறும் செப்டம்பர் 18ம் தேதி துளு தினம் கொண்டாடப்படும்,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் காதர் தெரிவித்தார்.

நேற்று அவர் அளித்த பேட்டி:

கர்நாடகாவின் இரண்டாவது கூடுதல் நிர்வாக மொழியாக துளுவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஆண்டு தோறும் செப்டம்பர் 18ம் தேதி, துளு தினம் கொண்டாட மாநில அரசு முடிவு செய்து உள்ளது. கன்னடம் எங்களுக்கு தாய் என்றால், துளு மகள் போல.

கன்னட மொழியை நேசிப்பதற்காக மற்ற மொழிகளை வெறுக்கவோ, நிராகரிக்கவோ தேவையில்லை. கன்னடத்தின் மீதான அன்பு, மற்ற மொழி பேசுபவர்களை விலக்கி வைக்கும் சக்தியாக இருக்கக்கூடாது.

மாறாக, அனைவரையும் அன்போடு ஒன்றிணைக்கும் பாலமாக அமைய இருக்க வேண்டும்.

தட்சிண கன்னடா மாவட்டத்தின் வளர்ச்சிக்காக 32,611 கோடி ரூபாயிலான திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

மாவட்ட அரசு மருத்துவமனையில் கூடுதலாக, 200 படுக்கை வசதிகளை செய்யும் பணிகள் நடக்கின்றன. தட்சிண கன்னடாவில் கிரஹலட்சுமி திட்டத்தின் கீழ், 3.82 லட்சம் பெண்களுக்கு 2,001 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us