UPDATED : நவ 17, 2026 12:00 AM
ADDED : நவ 16, 2026 11:02 PM
அ நிறம் | அளவு
எலஹங்கா: பெங்களூரின் எலஹங்காவில் வசித்தவர் சரண்கவுடா, 39. இவர் 10 ஆண்டுகளாக, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.
இவர் நவம்பர் 13ல், தன் மனைவியுடன் காரில், எலஹங்கா நியூடவுனில் உள்ள அலுவலகத்துக்கு வந்த போது மர்ம கும்பலால் கொல்லப்பட்டார்.
எலஹங்கா போலீசார் பல கோணங்களில் விசாரித்து, ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கிரண் கவுடா, 24, ருத்ரேஷ், 39, லோகேஷ், 47, கிரண், 20, ஆகாஷ், 19, ஆகியோரை கைது செய்தனர். இவர்களில் லோகேஷ், கிரண் ஆகியோர் தந்தை, மகன் ஆவர்.
ரியல் எஸ்டேட் தொழில் போட்டியில் கொலை நடந்தது தெரியவந்துள்ளது.
