/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஐ.பி.எஸ்., ஸ்ரீநாத் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை
/
ஐ.பி.எஸ்., ஸ்ரீநாத் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை
ஐ.பி.எஸ்., ஸ்ரீநாத் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை
ஐ.பி.எஸ்., ஸ்ரீநாத் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை
ADDED : ஜூலை 05, 2025 06:26 AM

பெங்களூரு: அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்த வழக்கில் தொடர்புடைய, ஐ.பி.எஸ்., ஸ்ரீநாத் மகாதேவ் ஜோஷி மீது நடவடிக்கை எடுக்கும்படி, தலைமை செயலருக்கு, லோக் ஆயுக்தா கடிதம் எழுதி உள்ளது.
கர்நாடகாவில் பல துறைகளில் பணியாற்றும் அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்த வழக்கில், சித்ரதுர்காவை சேர்ந்த முன்னாள் போலீஸ் ஏட்டு நிங்கப்பா கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.
இவருக்கும், லோக் ஆயுக்தாவில் எஸ்.பி.,யாக பணி செய்த ஐ.பி.எஸ்., அதிகாரி ஸ்ரீநாத் மகாதேவ் ஜோஷிக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததும், அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்ததில் பங்கு இருந்ததும் தெரிய வந்தது.
அதிகாரிகளை மிரட்டி பறித்த பணத்தை, கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ததும் தெரிய வந்தது.
இதனால் ஐ.பி.எஸ்., அதிகாரி ஸ்ரீநாத் மகாதேவ் ஜோஷி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் முன்ஜாமின் வாங்கினார்.
இந்நிலையில் தலைமை செயலர் ஷாலினிக்கு, லோக் ஆயுக்தா ஐ.ஜி., சுப்பிரமணீஸ்வரர் ராவ் எழுதிய கடிதத்தில், 'அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைதான முன்னாள் போலீஸ்காரர் நிங்கப்பாவுடன், ஐ.பி.எஸ்., ஸ்ரீநாத் மகாதேவ் ஜோஷிக்கு தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
'அவர் இந்திய சேவை விதிகள் 1968ஐ மீறி உள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.