sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

கர்நாடகாவில் அடுத்த 2 நாள் 6 மாவட்டங்களுக்கு... 'ரெட் அலெர்ட்!'; தீவிரமாகும் பருவமழையால் ஆறுகளில் வெள்ளம்

/

கர்நாடகாவில் அடுத்த 2 நாள் 6 மாவட்டங்களுக்கு... 'ரெட் அலெர்ட்!'; தீவிரமாகும் பருவமழையால் ஆறுகளில் வெள்ளம்

கர்நாடகாவில் அடுத்த 2 நாள் 6 மாவட்டங்களுக்கு... 'ரெட் அலெர்ட்!'; தீவிரமாகும் பருவமழையால் ஆறுகளில் வெள்ளம்

கர்நாடகாவில் அடுத்த 2 நாள் 6 மாவட்டங்களுக்கு... 'ரெட் அலெர்ட்!'; தீவிரமாகும் பருவமழையால் ஆறுகளில் வெள்ளம்


ADDED : மே 27, 2025 12:12 AM

Google News

ADDED : மே 27, 2025 12:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கை:


கேரளாவில் வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கும். ஆனால் ஒரு வாரத்துக்கு முன்னதாகவே, பருவ மழை துவங்கி உள்ளது. இதனால், கர்நாடகாவில் கடலோர மாவட்டங்கள், மலை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இன்று கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி; மலை மாவட்டங்களான ஷிவமொக்கா, குடகு, சிக்கமகளூரு ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.

இம்மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. அதுபோன்று, தார்வாட், ஹாவேரி, குடகு, ஹாசன், மைசூரு ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய உள்ளதால், 'மஞ்சள் அலெர்ட்' கொடுக்கப்பட்டுள்ளது.

நாளையும் தட்சிண கன்னடா, குடகு, சிக்கமகளூரு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. பெலகாவி, தார்வாட், உத்தர கன்னடா, உடுப்பி மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலெர்ட்'டும் ஷிவமொக்கா, ஹாசன், மைசூரு, சாம்ராஜ் நகர், பீதர், கலபுரகி, யாத்கிர், ராய்ச்சூர், கொப்பால், பல்லாரி மாவட்டங்களுக்கு 'மஞ்சள் அலெர்ட்'ம் கொடுக்கப்பட்டுள்ளது.

மே 29ல் தட்சிண கன்னடா, குடகு, ஷிவமொக்கா, சிக்கமகளூரு மவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலெர்ட்'ம் பெலகாவி, தார்வாட், உத்தர கன்னடா, உடுப்பி, யாத்கிர், ராய்ச்சூர், பல்லாரி, பெங்களூரு, துமகூரு, மாண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர், ராம்நகர், பெங்களூரு தெற்கு ஆகிய மாவட்டங்களுக்கு 'மஞ்சள் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

மே 30ல் தட்சிண கன்னடா, குடகு, ஷிவமொக்கா, சிக்கமகளூரு மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெங்களூரில் இதுவரை மே மாதம் முழுவதுமே சராசரியாக 30.54 செ.மீ., கோடை மழை பதிவாகும். ஆனால் இந்த ஆண்டில், நேற்று வரை 30.79 செ.மீ., மழை பெய்துள்ளது. இன்னும் ஐந்து நாட்கள் உள்ளன. மழை தொடர்வதால் சராசரியை விட கூடுதல் மழை பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று காலையே பெங்களூரு நகரின் பல இடங்களில் மழை பெய்தது. இதனால் பணிக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் சுரங்கப்பாதை, பஸ் நிறுத்தம் என பாதுகாப்பான இடங்களில் மக்கள் ஒதுங்கினர்.

ஒரு மணி நேரம் பெய்த மழையால், பல இடங்களில் சாலைகளில் மழை வெள்ளம் தேங்கியது.

வெள்ளப்பெருக்கு


காவிரி, ஹேமாவதி, சராவதி, நேத்ராவதி ஆறுகளில், ஜூன் கடைசி அல்லது ஜூலை முதல் வாரத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். ஆனால், இந்த ஆறுகளில் மே மாதத்திலேயே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் மட்டும் ஒரே நாளில் ௬ அடி அளவு தண்ணீர் உயர்ந்து சென்றது. குடகின் பாகமண்டலாவில் திரிவேணி சங்கத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குளிக்கும் பகுதி மூழ்கியது.

சராவதி ஆற்றில் அதிகரித்த வெள்ளத்தால், ஷிவமொக்காவின் ஜோக் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

அலமாட்டி அணைக்கு விநாடிக்கு 52,650 கன அடி நீரும்; கே.ஆர்.எஸ்.,க்கு 2,053 கன அடி நீரும்; கபினிக்கு 13,037 கன அடி நீரும்; லிங்கனமக்கிக்கு 17,530 கன அடி நீரும் வந்து கொண்டிருந்தது.

குடகு மாவட்டத்தில் குடகு பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு, 27ம் தேதி வரை அளிக்கப்பட்டிருந்த விடுமுறை, மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் துண்டிப்பு


குடகு, சிக்கமகளூரு மாவட்டங்களில் பெய்து வரும் கன மழையால், 300க்கும் மேற்பட்ட மின்கம்பம் முறிந்து விழுந்துள்ளன. இதனால் பல கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, பொது மக்கள் அவதிப்படுகின்றனர்.

ஹாசன் மாவட்டத்தில் ஹேமாவதி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், விளை நிலங்கள் மூழ்கி உள்ளன. 160க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் முறிந்து விழுந்ததில், கடந்த நான்கு நாட்களாக, 90க்கும் அதிகமான கிராமங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

தட்சணிகன்னடாவில் கடந்த மூன்று நாட்களில் ஏழு வீடுகள் சேதமடைந்துள்ளன. 230க்கும் மேற்பட்ட மின் கம்பங்களும்; இரண்டு மின்மாற்றிகளும் சேதம் அடைந்துள்ளன.

குக்கே சுப்பிரமண்யாவில் குமாரதாரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், இங்கு பக்தர்கள் குளிக்கும் பகுதி மூழ்கியது. பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

சுவர் இடிந்தது


பெலகாவியில் தொடர்ந்து பெய்து வருகிறது. மாவட்டத்தின் கோகாக்கின் மஹாலிங்கேஸ்வரா நகரை சேர்ந்த ரேஷ்மா, மூத்த மகள் குஷி, இளைய மகள் கிருத்திகா, 3, உறங்கிக் கொண்டிருந்தனர்.

நேற்று அதிகாலை இவர்களின் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில், கிருத்திகா சம்பவ இடத்தில் உயிரிழந்தாள்.

படுகாயம் அடைந்த ரேஷ்மாவும், குஷியும் மீட்கப்பட்டு, கோகாக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடு இசகள்ளி கிராமத்தைச் சேர்ந்த சித்தராஜு, 52, நேற்று முன்தினம் மாலை மேய்ச்சலுக்குச் சென்றிருந்தார்.

கன மழை பெய்தபோது, இரு பசுக்களுடன் சித்தராஜு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது கீழே அறுந்து விழுந்திருந்த மின்கம்பியை பசுக்கள் மிதித்து உயிருக்கு போராடின. பசுக்களை காப்பாற்ற முயற்சித்த சித்தராஜுவும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

'கனமழை அதிகரித்துள்ளதால், சுற்றுலா பகுதிகளுக்கு பயணியர் வர வேண்டாம். இந்நேரத்தில் கடலில் 2.7 மீட்டர் முதல் 3.3 மீட்டர் உயரம் வரை அலைகள் எழக்கூடும்.

'முருடேஸ்வர், கார்வார் கடற்கரைகளுக்கு வராமல் இருக்க, 'சிவப்பு கொடி' ஏற்றப்பட்டு உள்ளது. எனவே, கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்' என, மீனவர்களுக்கு, மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மீட்கப்பட்ட இளைஞர்கள்

கனமழை காரணமாக தட்சிணகன்னடா மாவட்டம், மூடபிதரே தாலுகாவின், புத்திகே கிராமத்தில் எருகுன்டி நீர்வீழ்ச்சியில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இதை காண்பதற்காக நேற்று காலை, ஐந்து சுற்றுலா பயணியர் வந்திருந்தனர்.நீரில் இறங்கவோ, பாறை மீது ஏறவோ வேண்டாம். அது ஆபத்தானது என, அப்பகுதி மக்கள் எச்சரித்தனர். இவர்களின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், சுற்றுலா பயணியர் பாறை மீது ஏறினர்.அப்போது நீர் வீழ்ச்சியில், வெள்ளப்பெருக்கு அதிகரித்ததால், ஐவரும் பாறையில் சிக்கிக் கொண்டனர். உதவி கேட்டு கூச்சலிட்டனர். இதை கண்ட அப்பகுதி மக்கள், கயிற்றின் உதவியால், ஐந்து சுற்றுலா பயணியரையும் காப்பாற்றி, கரைக்கு அழைத்து வந்தனர். அவர்கள் உதவிக்கு வந்திருக்காவிட்டால், பாறை வழுக்கி ஐவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லும் அபாயம் இருந்தது. தப்பித்தோம், பிழைத்தோம் என, அங்கிருந்து சென்றனர்.








      Dinamalar
      Follow us