தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சிவகுமாரிடம் எச்சரிக்கையாக இருங்கள் சித்தராமையாவுக்கு ரெட்டி அறிவுரை

 சிவகுமாரிடம் எச்சரிக்கையாக இருங்கள் சித்தராமையாவுக்கு ரெட்டி அறிவுரை

 சிவகுமாரிடம் எச்சரிக்கையாக இருங்கள் சித்தராமையாவுக்கு ரெட்டி அறிவுரை


ADDED : ஜன 27, 2026 05:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 27, 2026 05:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொப்பால்: முதல்வர் பதவி விவகாரத்தில் சிவகுமாரிடம், சித்தராமையா எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, கங்காவதி பா.ஜ., - எம்.எல்.ஏ., ஜனார்த்தன ரெட்டி கூறினார்.

அவர் அளித்த பேட்டி:

சித்தராமையா முதல்வர் பதவியை விட் டுக்கொடுக்க தயாராகி விட்டார். இருப்பினும், தேவராஜ் அர்சின் சாதனையை முறியடிப்பதற்காக, வேண்டுமென்றே முதல்வர் பதவியில் இருக்கிறார்.

பதவியை விட்டு விலகிய பிறகும், 'சூப்பர் சி.எம்.,' ஆக இருந்து மாநிலத்தை ஆள நினைக்கிறார். அவரது ஆதரவாளர்கள் எத்தனை பேரை அமைச்சராக்க முடியும் என்று கணக்கு போடுகிறார். நடப்பு ஆண் டு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னரோ அல்லது பின்னரோ டி.கே.சிவகுமார் முதல்வராக பதவியேற்பார்.

சித்தராமையாவிடம் இருந்து முதல்வர் நாற்காலியை சிவகுமார் பறித்து விடுவார். எனவே, சித்தராமையா உஷாராக இருக்கவும். எனக்கு அரசியலில் மறுவாழ்வு அளித்த கங்காவதியை விட்டு, எக்காரணம் கொண்டும் போக மாட்டேன்.

அடுத்த தேர்தலிலு ம் கங்காவதியிலே போட்டியிடுவேன். 2028ல் பா.ஜ., ஆட்சிக்கு வருவது உறுதி. அதன் பிறகு, காங்கிரஸ் கட்சியினர் நிம்மதியாக வீட்டில் ஓய்வு எடுக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us