தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/திருமண தடை நீக்கும் ரேணுகா எல்லம்மா தேவி

திருமண தடை நீக்கும் ரேணுகா எல்லம்மா தேவி

திருமண தடை நீக்கும் ரேணுகா எல்லம்மா தேவி


UPDATED : நவ 17, 2026 12:00 AM

ADDED : நவ 16, 2026 07:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2026 12:00 AM ADDED : நவ 16, 2026 07:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

– நமது நிருபர் –

பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் தாலுகா காந்தனகுன்டே கிராமத்தில், ஸ்ரீரேணுகா எல்லம்மா தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலின் கட்டடக் கலை, பக்தர்களை பிரமிக்க வைக்கிறது. கோவில் முகப்பில் உள்ள கோபுரம் அழகிய சிற்பங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரேணுகா தேவி, பரசுராமர், நவக்கிரக சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கருவறையின் உள்ளே அன்னை ரேணுகா எல்லம்மா தேவி உக்கிரமும், சாந்தமும் கலந்த தெய்வீக பொலிவோடு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அம்மனின் விக்ரகம் பளபளக்கும் ஆபரணங்களாலும், பட்டு பீதாம்பரங்களாலும், மலர் மாலைகளாலும் எப்போதும் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.

மாங்கல்ய பலம்



திருமண வயதைத் தாண்டியும் திருமணம் தள்ளிப் போகும் பெண்கள், வரன் அமைவதில் தடை உள்ளவர்கள் இங்கு வந்து அம்மனுக்கு மாங்கல்ய காணிக்கை அல்லது வளையல் காப்பு சாற்றி வேண்டிக் கொள்கின்றனர்.

இதன்மூலம் திருமணத் தடை நீங்கும் என்பது பெண் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இதுபோல சுமங்கலி பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் பெருகவும், மாங்கல்ய பலம் நிலைக்கவும் அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர். எல்லம்மா தேவி நாக வடிவோடும் தொடர்புடையவர் என்பதால், ஜாதகத்தில் ராகு, கேது தோஷம், காலசர்ப்ப தோஷம் உள்ளவர்களும் இங்கு வருகின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதி, அம்மன் சன்னிதியில் தொட்டில் கட்டி வேண்டிச் சென்றால், அடுத்த ஆண்டே மழலை செல்வத்தோடு வந்து நேர்த்திகடன் செலுத்துவதும் அதிசயமாக பார்க்கப்படுகிறது.

நோய் தீரும்



நாள்பட்ட உடல்நல குறைபாடுகள், அம்மை, தோல் வியாதிகள், மனரீதியான பயம், துாக்கமின்மை, மன உளைச்சலால் பாதிக்கப்படுபவர்கள் இங்கு வந்து அம்மன் பாதத்தில் வைக்கப்படும் தீர்த்தத்தைப் பருகி, விபூதி அணிந்து நோய்களின் வீரியம் குறைந்து பூரண குணம் அடைகின்றனர்.

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கோவிலுக்கு, பக்தர்கள் அதிகளவில் வருகை தருகின்றனர். இரண்டு நாட்களும் லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விசேஷ ஊஞ்சல் சேவை நடக்கிறது. ராகு காலத்தில் அம்மன் சன்னிதியில் எலுமிச்சைப் பழத்தை நறுக்கி அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் எதிரிகள் தொல்லை நீங்கும்; நினைத்த காரியம் கைகூடும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

தினமும் காலை 7:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையும், மாலை 4:30 மணி முதல் இரவு 7:30 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.

ஆண்டிற்கு ஒரு முறை இங்கு நடக்கும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. மரத்தாலான தேரில் பவனி வரும் எல்லம்மா தேவி தேரின் மீது பழங்கள், மிளகுகளை வீசி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர்.

மேலும் தொடர்புக்கு: 70263 97679

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us