/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரேணுகாசாமி கொலை வழக்கு விசாரணை துவக்கம்
/
ரேணுகாசாமி கொலை வழக்கு விசாரணை துவக்கம்
ADDED : டிச 18, 2025 07:11 AM
பெங்களூரு: சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கு விசாரணை நேற்று துவங்கியது.
சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள், தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இக்கொலை வழக்கு விசாரணை, பெங்களூரு 57 வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நேற்று துவங்கியது. ரேணுகாசாமியின் பெற்றோர் காசிநாத், ரத்னபிரபா ஆகியோர் ஆஜராயினர். அவர்கள் கூறிய வாக்குமூலம், வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
சிறையில் இருந்தபடி தர்ஷன் உட்பட மற்றவர்கள் காணொளி மூலம் ஆஜராகினர். ஆனால் 16, 17 வது குற்றவாளிகளான முறையே கேசவமூர்த்தி, நிகில் நாயக் ஆகியோர் ஆஜராகவில்லை.
வழக்கிற்கு சம்பந்தப்பட்ட சாட்சிகள், வக்கீல்களை தவிர, மற்றவர்களை வெளியேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசு தரப்பில் வக்கீல் பிரசன்ன குமாரும், தர்ஷன் தரப்பில் நாகேசும் ஆஜராகினர்.

