அங்கன்வாடிக்கு ஆட்சேர்ப்பு விசாரணை நடத்த கோரிக்கை
அங்கன்வாடிக்கு ஆட்சேர்ப்பு விசாரணை நடத்த கோரிக்கை
ADDED : ஆக 13, 2026 12:10 AM
அ நிறம் | அளவு
தங்கவயல்: 'அங்கன்வாடி ஊழியர்கள் நியமனத்தில் முறைகே டு நடந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அம்பேத்கர் சுவாமிமானி சேனா அமைப்பினர் கோலார் மாவட்ட கலெக்டர் ரவிகுமாரிடம் நேற்று மனு அளித்தனர் .
அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது:
அங்கன்வாடிக்கு பணியாளர்கள், உதவியாளர்கள் நியமனத்தில் அரசு விதிமுறைப்படி, இணையவழியில் விண்ணப்பங்களை பெற்று ஆட்சேர்ப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், இணையவழியில் விண்ணப்பங் களை கோராமல், தங்களுக்கு வேண்டியவர்களிடமே விண்ணப்பங்களை பெற்று அதை தே ர்வு செய்துள்ளனர். இதில் முறைகேடு நடந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
