தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சக்லேஸ்பூர் - சுப்ரமண்யா சாலை இடையே 'வந்தே பாரத ் ' ரயில் சோதனை ஓட்டம் வெற்றி

 சக்லேஸ்பூர் - சுப்ரமண்யா சாலை இடையே 'வந்தே பாரத ் ' ரயில் சோதனை ஓட்டம் வெற்றி

 சக்லேஸ்பூர் - சுப்ரமண்யா சாலை இடையே 'வந்தே பாரத ் ' ரயில் சோதனை ஓட்டம் வெற்றி


ADDED : ஆக 13, 2026 12:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2026 12:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மங்களூரு: ஹாசன் சக்லேஸ்பூர், தட்சிண கன்னடாவின் சுப்ரமண்யா சாலை ரயில் நிலையங்கள் இடையே, நேற்று, வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம், வெற்றிகரமாக நடந்தது.

கர்நாடகாவில், 10க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகின்றன. கடலோர மாவட்டங்களிலும் இந்த சேவையை விரிவுபடுத்த வேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் கோரிக்கை வந்தது.

இதையடுத்து, பெங்களூரு - மங்களூரு இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

தேதி நிர்ணயம் பெங்களூரு - மங்களூரு இடையே வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை துவக்குவதற்காக, ஆக., 12 முதல், 20ம் தேதி வரை ஹாசன் மாவட்டம் சக்லேஸ்பூரில் இருந்து தட்சிண கன்னடா மாவட்டம் சுப்ரமண்யா ரோடு இடையே 60 கி.மீ.,க்கு, சோதனை ஓட்டம் தேதி நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழகம், சென்னையில் ஐ.சி.எப்., எனும் ஒருங்கிணைந்த பெட்டி தொழிற்சாலையில் இருந்து புறப்பட்ட ஏ.இ.பி., எனும் தானியங்கி அவசர பிரேக் தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட வந்தே பாரத் ரயிலுக்கான 20 பெட்டிகள், நேற்று முன்தினம் மைசூரு வந்தடைந்தன.

நேற்று மதியம் சுப்ரமண்யா ரோடு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயில், மலைப்பாதையில் மணிக்கு 30 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டது. சோதனையின் போது, ரயில் பெட்டிகளில் பயணியருக்கு பதிலாக, மணல் மூட் டைகள் ஏற்றப்பட்டிருந்தன.

செங்குத்தான நிலப்பரப்பில் ரயிலின் தொழில்நுட்ப திறன்களை மதிப்பிடுவதற்காக, வெவ்வேறு வேகங்களில் பலமுறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மலைபாதையில் ரயில் பாதுகாப்பாகவும், திறமையாகவும் இயங்கக்கூடிய இயக்க வேகத்தை கண்டறிய, இச்சோதனையின் போது வேகம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.

இனிப்பு வழங்கல் பின், குறிப்பிட்ட நேரத்தில், சக்லேஸ்பூர் ரயில் வந்தடைந்தது.

இந்த ரயிலை, சக்லேஸ்பூர் பா.ஜ., - எம்.எல்.ஏ., சிமென்ட் மஞ்சு வரவேற்று, அங்கிருந்து பயணியருக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

பின், அவர் கூறியதாவது:

இவ்வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை துவங்கும்படி, மத்திய அமைச்சர் சோமண்ணாவிடம் கோரிக்கை விடுத்திருந்தேன். சக்லேஸ்பூர் வழித்தடம் வரையிலான ரயில்வே மின்மயமாக்கல் பணிகள் முழுமையாக முடிந்து, சோதனை ஓட்டம் நடந்துள்ளது.

இந்த ரயிலில், 20 பெட்டிகள் உள்ளதால், ஒரே நேரத்தில், 1,080 பயணியர் வசதியாக பயணிக்கலாம். மலைப்பாதையின் செங்குத்தான சரிவுகளில் பாதுகாப்பாக செல்வதற்காக, ஏ.இ.பி., தொழில்நுட்பம் பொருத்தப்பட்டு உள்ளது .

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us