தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'மப்டி' போலீசாருக்கும் இலவச பயணம் பி.எம்.டி.சி.,க்கு வேண்டுகோள்

 'மப்டி' போலீசாருக்கும் இலவச பயணம் பி.எம்.டி.சி.,க்கு வேண்டுகோள்

 'மப்டி' போலீசாருக்கும் இலவச பயணம் பி.எம்.டி.சி.,க்கு வேண்டுகோள்


ADDED : ஆக 05, 2026 11:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2026 11:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: 'மப்டியில் உள்ள போலீசார் தங்களின் அதிகாரப்பூர்வ அடையாள அட்டையை காண்பித்தால், அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும்' என, பி.எம்.டி.சி.,யிடம், போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து, பி.எம்.டி.சி.,க்கு போலீஸ் துறை எழுதிய கடிதம்:

கர்நாடக போலீஸ் புகார்கள் வாரிய உ றுப்பினர் மோகன் குமார் தானப்பாவின் வேண்டுகோளின்படி, போலீஸ் துறை சார்பில் பி.எம்.டி.சி.,க்கு இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது.

தற்போது சீருடை அணிந்த போலீசாருக்கு மட்டுமே, பஸ்களில் இலவசமாக பயணிக்கும் சலுகை உள்ளது. ஆனால், மப்டி எனும், சீருடை அணியாமல் பயணிக்கும் போலீசாருக்கு இந்த சலுகை இல்லை.

உளவுப்பிரிவு, குற்றப்பிரிவு, சி.சி.பி., மற்றும் வி.ஐ.பி., பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் போலீசார், மப்டியில் பலர் பணியாற்றுகின்றனர். இவர்கள் பஸ்சில் பயணிக்கும் போது, டிக்கெட் வாங்கும்படி நடத்துநர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதனால் அவர்களுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் நடக்கிறது. இதனால், எங்கள் ஊழியர்களின் அன்றாட பணிக்கு, இடையூறு ஏற்படுகிறது.

சாதாரண உடையில் நடமாடும் போலீசார், சந்தேகத்திற்கிடமான நபர்களை கண்காணிப்பது, தகவல் சேகரிப்பது, குற்றவாளிகளை பின் தொடர்வது போன்ற, பணிகளில் ரகசியமாக ஈடுபட்டிருப்பர்.

இத்தகைய நேரத்தில், டிக்கெட் தொடர்பாக, வாக்குவாதம் நடந்தால், அவர் போலீஸ் துறையை சேர்ந்தவர் என்பது பகிரங்கமாகும்; ரகசிய நடவடிக்கைக்கு பாதிப்பு ஏற்படும்.

இதை மனதில் கொண்டு, மப்டியில் உள்ள போலீஸ் அதிகாரிகள், ஏட்டுகள் தங்களின் அதிகாரப்பூர்வ அடையாள அட்டையை காண்பித்தால், அவர்கள் இலவசமாக பயணிக்க அனுமதியளிக்க வேண்டும்.

பெங்களூரில் அன்றாட பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு, பஸ் பயணம் அவசியம். ஆண்டு தோறும் அவர்களின் பயண கட்டணமாக, 10 சதவீதம் தொகையை பி.எம்.டி.சி.,க்கு போலீஸ் துறை செலுத்துகிறது. மப்டி போலீசாருக்கு, இலவசமாக பயணிக்க வாய்ப்பளித்தால், அவர்களின் பணிக்கு உதவியாக இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us