கெம்பே கவுடா விமான நிலையத்தில் ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்
கெம்பே கவுடா விமான நிலையத்தில் ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்
ADDED : செப் 02, 2026 12:53 AM

பெங்களூரு: கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில், தாய்லாந்து நாட்டிலிருந்து பெங்களூருக்கு கடத்தப்பட்ட, 1 கோடி ரூபாய் மதிப்புள்ள, 3.05 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை, சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தாய்லாந்து நாட்டின் புக்கட்டில் இருந்து பெங்களூருக்கு கஞ்சா கடத்தப்படுவதாக, கெம்பே கவுடா, சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று தாய்லாந்தில் இருந்து வந்த விமான பயணியரின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, பயணி ஒருவரின் பையில் சோதனை செய்தபோது, 3.05 கிலோ மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு, 1 கோடி ரூபாய் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கஞ்சாவை கொண்டு வந்த நபரிடம், பெங்களூரில் யாருக்கு வினியோகிக்கப்படுகிறது உட்பட கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
