/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கன்னடர் தலையில் ரூ.1 லட்சம் கடன்
/
கன்னடர் தலையில் ரூ.1 லட்சம் கடன்
ADDED : பிப் 05, 2025 06:52 AM

பெங்களூரு: ஒவ்வொரு கன்னடர் தலையிலும், 1 லட்சம் ரூபாய் கடனை சித்தராமையா அரசு சுமத்தி உள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவர் அசோக் சாடியுள்ளார்.
'எக்ஸ்' பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவு:
கர்நாடகாவின் தற்போதைய கடன் 6.65 லட்சம் கோடி ரூபாயை எட்டி உள்ளது. காங்கிரஸ் அரசின் நிகழ்ச்சி நிரல், கர்நாடகாவை திவாலாக்குது தான். கடன் வாங்குவதை முதல்வர் முழுநேர வேலையாக வைத்துள்ளார்.
ஊழல் நிறைந்த காங்கிரஸ் அரசு, ஒவ்வொரு கன்னடர் தலையிலும் 1 லட்சம் ரூபாய் கடனை சுமத்தி உள்ளது. பா.ஜ., ஆட்சியின்போது மாநிலம் புதுமை குறியீடு மற்றும் மூலதன முதலீட்டில் முதலிடத்தில் இருந்தது. தற்போது அதிக கடன் வாங்கிய மாநிலத்தில் முதலிடத்தில் இருப்பது மிகுந்த அவமானம்.
சித்தராமையா, தன் பெயரை, 'சாலா ராமையா' என்று மாற்றிக் கொண்டால் நல்லது. ஊழல் நிறைந்த ஆட்சி தொடர்ந்தால் 12 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. செய்யாத தவறுக்காக கன்னடர்கள் கடன் சுமையை சுமக்க போவது உறுதி, உறுதி, உறுதி.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.