/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காய்கறி வியாபாரியிடம் ரூ.15 லட்சம் கொள்ளை
/
காய்கறி வியாபாரியிடம் ரூ.15 லட்சம் கொள்ளை
ADDED : ஆக 26, 2025 03:02 AM
சீனிவாசப்பூர்: காரில் சென்று, காய்கறி வியாபாரியை தாக்கிய மர்மகும்பல், அவரிடமிருந்து 15 லட்சம் ரூபாயை பறித்து சென்றனர்.
கோலார் மாவட்டம், சீனிவாசப்பூர் தாலுகாவின் மார்கண்டபுரா கிராமத்தில் வசிப்பவர் லிங்கராஜு. இவர் கல்லுார் கிராமத்தில், 'எஸ்.எல்.எம். வெஜிடபிள்' என்ற பெயரில், காய்கறிகள் கடை நடத்துகிறார். விவசாயிகளிடம் காய்கறிகள் கொள்முதல் செய்வது வழக்கம்.
இவர் வாங்கிய காய்கறிகளுக்காக, விவசாயிகளுக்கு பணம் கொடுக்க வேண்டியிருந்தது. எனவே 15 லட் சம் ரூபாயுடன், நேற்று மதியம் காரில், கோலாருக்கு சென்று கொண்டிருந்தார். சீனிவாசபுராவின் காலனி கேட் அருகில் செல்லும் போது, சிறுநீர் கழிப்பதற்காக காரை நிறுத்திவிட்டு, இறங்கி சென்றார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், கார் கண்ணாடியை உடைத்து, பணத்தை திருட முயற்சித்தனர். சத்தம் கேட்டு ஓடி வந்த லிங்கராஜு, மர்ம நபர்களை தடுக்க முற்பட்டார். அவர்கள், பீர் பாட்டிலால், அவரை தாக்கிவிட்டு பணத்தை எடுத்து கொண்டு தப்பியோடினர்.
காயமடைந்த லிங்கராஜு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சீனிவாசபுரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்தை கோலார் எஸ்.பி., நிகில் பார்வையிட்டார்.