/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஊழியர்களின் உணவுக்கு மாதந்தோறும் ரூ.1,500
/
ஊழியர்களின் உணவுக்கு மாதந்தோறும் ரூ.1,500
ADDED : செப் 01, 2025 03:52 AM
பெங்களூரு,: பெங்களூரு குடிநீர், வடிகால் வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்களின் காலை உணவுக்காக மாதந்தோறும் 1,500 ரூபாய் வழங்கப்பட உள்ளது.
வாரியத்தலைவர் ராம்பிரசாத் மனோகர் வெளியிட்ட அறிக்கை:
பெங்களூரு குடிநீர் வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்காக 'குடிநீர் வாரிய அன்னபூர்ணா திட்டம்' செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், 700க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட உள்ளன. மாதந்தோறும் 1,500 ரூபாய், ஊழியர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இத்திட்டம் ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து நடத்தப்படுகிறது.
இந்த தொகை, ஊழியர்களின் காலை உணவு செலவுக்காக வழங்கப்படுகிறது. ஊழியர்களின் ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிக்கும் முன்னோடி திட்டமாகும். இத்திட்டம் துணை முதல்வர் சிவகுமாரின் வழிகாட்டுதல் பேரில் நடக்கிறது. ஸ்மார்ட் கார்டுகளை துணை முதல்வர் சிவகுமார் ஊழியர்களுக்கு இன்று வழங்குகிறார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.