ADDED : ஜூலை 12, 2026 11:51 PM
அ நிறம் | அளவு
பெங்களூரு: பாங்காக் நாட்டில் இருந்து பெங்களூரு வந்த விமானத்தில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக, பெங்களூரு கெம்பே கவுடா விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன் படி, கடந்த 10ம் தேதி பாங்காக்கில் இருந்து வந்த விமானத்தில் பயணித்த பயணியரின் உடமைகள் சோதனை செய்யப்பட்டன.
அப்போது, ஒரு பயணியின் பையில், 4.22 கோடி ரூபாய் மதிப்புள்ள, 12.07 கிலோ , 'ஹைட்ரோபோனிக் கஞ்சா' இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியா க அவரை கைது செய்த அதிகாரிகள், கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
