ADDED : ஜூலை 12, 2026 11:51 PM
ஆன்மிகம் ஆனி திருவாதிரை ஆனி திருவாதிரையை ஒட்டி, திவ்ய பிரபந்தம், சேவை காலம், சாத்துமுறை, மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல் - மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: ஸ்ரீ பான்பெருமாள் கோவில் ஸ்ரீ கிருஷ்ணா மந்திர், பஜார் தெரு, ஹலசூரு.
மண்டல பூஜை ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்ததை ஒட்டி, மண்டல பூஜை - காலை 6:00 முதல், மதியம் 12:00 மணி வரையிலும்; மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரையிலும்; ஹோமம் - காலை 10:00 முதல், 11:00 மணி வரை; அபிஷேகம் - 11:00 முதல், மதியம் 12:00 மணி வரை; ஆரத்தி - மதியம் 12:30 மணி. இடம்: ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில், பாபுராயனகொப்பலு, ஸ்ரீரங்கபட்டணா, மாண்டியா.
லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
ஆஷாட நவராத்திரி ஸ்ரீ ஆதிசக்தி மாரியம்மன், ஸ்ரீ கல்யாண வாராஹி அம்மன் கோவில் கன்னட ஆஷாட நவராத்திரி, கொடியேற்றல், காலை: 9:15 மணி; அமாவாசை அடையாள பூஜை: இரவு 8:30 மணி. இடம்: ராபர்ட்சன்பேட்டை 4வது பிளாக், தங்கவயல்.
