/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அரசை கவிழ்க்க ரூ.1,000 கோடி: எத்னால் மீதான வழக்கு ரத்து
/
அரசை கவிழ்க்க ரூ.1,000 கோடி: எத்னால் மீதான வழக்கு ரத்து
அரசை கவிழ்க்க ரூ.1,000 கோடி: எத்னால் மீதான வழக்கு ரத்து
அரசை கவிழ்க்க ரூ.1,000 கோடி: எத்னால் மீதான வழக்கு ரத்து
ADDED : பிப் 09, 2025 06:58 AM

பெங்களூரு: காங்கிரஸ் அரசை கவிழ்க்க, 1,000 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டது என கூறியதற்காக பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் யத்னால் மீது தொடரப்பட்ட வழக்கை, கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
கடந்தாண்டு தாவணகெரேயில் பேசிய பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால், 'கர்நாடக மாநில காங்கிரஸ் அரசை கவிழ்க்க, மூத்த தலைவர், 1,000 கோடி ரூபாய் பேரம் பேசினார்' என கூறியிருந்தார்.
இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலர் மனோகர், மாநிலத்தில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் எத்னால் பேசுவதாக கூறி தாவணகெரேயில் உள்ள காந்தி நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசாரும் வழக்குப் பதிவு செய்தனர்.
தன் மீதான வழக்கை ரத்து செய்யும்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் எத்னால் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா கூறுகையில், ''போலீசார் சமர்ப்பித்த ஆதாரத்தில், சம்பந்தப்பட்டவரின் பேச்சு, மாநிலத்தில் கலவரம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக இல்லை.
''குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரம் இல்லாதபோது, இவ்வழக்கை மேலும் விசாரிப்பது, சட்டப்படி குற்றமாகும். எனவே, இவ்வழக்கு ரத்து செய்யப்படுகிறது,'' என்றார்.