ADDED : ஆக 22, 2026 11:24 PM
பெங்களூரு: பெங்களூரின் மெஜஸ்டிக்கில் பி.எம்.டி.சி., பஸ் நிலையத்தில் இருந்து, பஸ்கள் வெளியேறும் சாலையில், நேற்று காலையில் திருநங்கையான தேவி, 30, என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவலறிந்து அங்கு வந்த போலீசார், உடலை மீட்டு விசாரணையில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்தின் சுற்றுப்பகுதிகளில் உள்ள, கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது, கொலையாளியின் அடையாளம் தெரிந்தது. ராமமூர்த்தி நகரில் வசிக்கும் கவுதம், 29, நேற்று அதிகாலை மெஜஸ்டிக் பஸ் நிலையம் அருகில், திருநங்கை தேவியை வழிமறித்து, பணம் கேட்டு மிரட்டினார்.
அப்போது அவர் தன்னிடம், 200 ரூபாய் மட்டுமே உள்ளது என, கூறி பணம் தர மறுத்தார். இதனால் கோபம் அடைந்த கவுதம், தேவியை கத்தியால் கழுத்தில் குத்தி விட்டு தப்பியோடினார். இதில் அவர் இறந்தார். கவுதமை போலீசார் தேடுகின்றனர்.
