ADDED : ஆக 22, 2026 11:24 PM
அ நிறம் | அளவு
குடகு: பெங்களூரை சேர்ந்தவர் முரளி கிருஷ்ணா, 40. இவர் தன் நண்பர்களுடன், குடகு மாவட்டத்துக்கு, சுற்றுலா வந்தார். பொன்னம்பேட் தாலுகாவின், தேராலு கிராமத்தில் உள்ள ஹோம்ஸ்டேவில் தங்கியிருந்தனர்.
முரளி கிருஷ்ணா நேற்று மாலை, ஹோம்ஸ்டே அருகில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது காட்டு யானை, நாயை விரட்டி வந்தது. நாய் ஓடிவிட்டது. எதிரே வந்த முரளி கிருஷ்ணாவை தாக்கியது.
திடீரென யானை வந்ததால் அவரால் தப்பியோட முடியவில்லை. பலத்த காயமடைந்த அவரை, அப்பகுதியினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியில் அவர் உயிரிழந்தார்.
