ADDED : ஜூலை 22, 2026 11:28 PM

பெங்களூரு: நடைபாதையில் வாகனம் ஓட்டினால் 5,000 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டுமென போக்குவரத்து துறை அமைச்சர் பைரதி சுரேஷுக்கு, அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா கடிதம் எழுதி உள்ளார்.
இது குறித்து, பெங்களூரு நகர வளர்ச்சி துறை கிருஷ்ண பைரே கவுடா அளித்த பேட்டி:
நடைபாதைகளில் வாகனம் ஓட்டுவோர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைபாதையில் வாகனம் ஓட்டினால் விதிக்கப்படும் அபராத தொகையை 500 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாக உயர்த்த வேண்டும். இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் பைரதி சுரேஷுக்கு கடிதம் எழுதி உள்ளேன்.
நகரின் முக்கிய சாலைகளில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. 'பார்க்கிங் ஏரியா'வில் மட்டுமே வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும். போக்குவரத்து சிக்னல்கள் அருகே பி.எம்.டி.சி., பஸ்கள் தேவையின்றி நிற்கக்கூடாது. சிக்னல்கள் அருகே தேவையின்றி எந்த வாகனங்களும் நிற்க அனுமதியில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
