தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/அமைச்சர் பிரியங்க் மீது ஆர்.எஸ்.எஸ்., புகார்

அமைச்சர் பிரியங்க் மீது ஆர்.எஸ்.எஸ்., புகார்

அமைச்சர் பிரியங்க் மீது ஆர்.எஸ்.எஸ்., புகார்


UPDATED : நவ 12, 2026 12:00 AM

ADDED : நவ 11, 2026 09:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2026 12:00 AM ADDED : நவ 11, 2026 09:48 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ஆர்.எஸ்.எஸ்., குறித்து தொடர்ந்து அவதுாறு செய்தி பரப்புவதாக, உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது; இன்னும், எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்படவில்லை.

பெங்களூரு பனசங்கரி போலீசில், ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் தேஜஸ் கவுடா அளித்துள்ள புகார் மனுவில், உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, ‘பீஹார், ஹரியானா மாநிலங்களில் 44 ஆயிரத்து, 250 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்துடன், ஆர்.எஸ்.எஸ்.,சை தொடர்புபடுத்தி, ஏ.ஐ., மூலம் உருவாக்கப்பட்ட போலி படத்தை வெளியிட்டுள்ளார்.

‘சட்டம் – ஒழுங்கை பராமரிக்கும், பொறுப்பேற்கப்பட்ட அரசியல் அமைப்பு பதவியான உள்துறை அமைச்சராக இருக்கும் ஒருவர், ஒரு அமைப்புக்கு எதிராக பொய் தகவல்களை பரப்புவது கவலைக்குரிய விஷயமாகும். அமைச்சரான அவர், தவறான மற்றும் போலியான தகவல்களைப் பரப்பி, சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்க முயற்சிக்கிறார். எனவே, அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

புகார் பெறப்பட்ட நிலையில், இன்னும் முறைப்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us