/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரஸ்ஸல் மார்க்கெட் மறுசீரமைப்பு சென்ட்ரல் மாநகராட்சி அனுமதி
/
ரஸ்ஸல் மார்க்கெட் மறுசீரமைப்பு சென்ட்ரல் மாநகராட்சி அனுமதி
ரஸ்ஸல் மார்க்கெட் மறுசீரமைப்பு சென்ட்ரல் மாநகராட்சி அனுமதி
ரஸ்ஸல் மார்க்கெட் மறுசீரமைப்பு சென்ட்ரல் மாநகராட்சி அனுமதி
ADDED : செப் 11, 2025 11:37 PM

சிவாஜிநகர்: வரலாற்று சிறப்புமிக்க ரஸ்ஸல் மார்க்கெட்டை மறுசீரமைக்க பெங்களூரு சென்ட்ரல் மாநகராட்சி அனுமதி வழங்கி உள்ளது.
பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள ரஸ்ஸல் மார்க்கெட் வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் ஒன்றாகும். இந்த மார்க்கெட்டை புதுப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல காலமாகவே இருந்து வருகிறது.
இம்மார்க்கெட்டை புதுப்பிப்பது குறித்து நேற்று சிவாஜிநகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத், பெங்களூரு மாநகராட்சி சென்ட்ரல் கமிஷனர் ராஜேந்திர சோழன் மற்றும் பிற அதிகாரிகள் மார்க்கெட் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்பின், பெங்களூரு சென்ட்ரல் மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:
ரஸ்ஸல் மார்க்கெட்டை மறுசீரமைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதன்படி, மார்க்கெட் பழமை மாறாமல் மறுசீரமைக்கப்படும். நிலத்தடி, நீர், மின்சாரம், கழிப்பறை வசதிகள், திடக்கழிவு பிரித்தல் உள்ளிட்டவை மேம்படுத்தப்படும்.
மார்க்கெட்டை சுற்றியுள்ள பகுதிகளில் துாய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடைக்காரர்கள், குப்பையை சாலைகளில் கொட்டக்கூடாது.
மார்க்கெட் பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் நடக்கும் தூர்வாரும் பணிகள் உடனடியாக முடிக்கப்பட வேண்டும். இந்த மறுசீரமைக்கும் பணியின்போது, கடைக்காரர்களின் ஒத்துழைப்பு வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.