/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரஷ்ய பெண்ணின் காதலன் பெங்களூரு வருகை 2 குழந்தைகளுக்கும் உரிமை கோருகிறார்
/
ரஷ்ய பெண்ணின் காதலன் பெங்களூரு வருகை 2 குழந்தைகளுக்கும் உரிமை கோருகிறார்
ரஷ்ய பெண்ணின் காதலன் பெங்களூரு வருகை 2 குழந்தைகளுக்கும் உரிமை கோருகிறார்
ரஷ்ய பெண்ணின் காதலன் பெங்களூரு வருகை 2 குழந்தைகளுக்கும் உரிமை கோருகிறார்
ADDED : ஜூலை 16, 2025 11:10 PM

பெங்களூரு: குகையில் இருந்து இரண்டு குழந்தைகளுடன் மீட்கப்பட்ட ரஷ்ய பெண்ணின் இஸ்ரேலிய காதலன் பெங்களூரு வந்துள்ளார்.
இரண்டு குழந்தைகளும் உரிமை கோரும் அவர், 'குழந்தைகளை தன்னுடன் அனுப்பி வைக்க வேண்டும்' என கேட்டுள்ளார்.
உத்தர கன்னடாவின் கோகர்ணா ராமதீர்த்த மலைப் பகுதியில், குகைக்குள் வசித்த ரஷ்யாவை சேர்ந்த நீனா குடியா, 40, என்ற பெண், அவரது குழந்தைகள் பிரேயா, 6, அமா, 4, ஆகியோரை, கோகர்ணா போலீசார் சில தினங்களுக்கு முன் மீட்டனர்.
அவர்கள், துமகூரில் உள்ள வெளிநாட்டினர் பாதுகாப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 'குகைக்குள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தேன். குகைக்குள் பாம்பு வந்தாலும் எங்களை எதுவும் தொந்தரவு செய்யவில்லை.
'மனிதர்களை பார்த்தால் தான் பயமாக உள்ளது. இயற்கையை ரசிக்க தான் குழந்தைகளுடன் குகைக்குள் தங்கி இருந்தேன். ரஷ்யாவுக்கு செல்ல தயாராக உள்ளேன்' என, நீனா குடியா கூறி இருந்தார்.
உக்ரைன்
'லிவிங் டூ கெதர்' முறைப்படி காதலனுடன் சேர்ந்து வாழ்ந்ததால், நீனாவுக்கு குழந்தைகள் பிறந்ததும் தெரிந்தது. ஆனால், தன் காதலனை பற்றி, எந்த தகவலும் வெளியிடாமல் இருந்தார்.
இந்நிலையில் நீனாவின் காதலனான இஸ்ரேலிய நாட்டின் டிரோர் கோல்ட்ஸ்டீன் நேற்று பெங்களூரு வந்தார். அவர் அளித்த பேட்டி:
கடந்த 2017ல் கோவாவில் நீனாவை சந்தித்தேன். அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். எங்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது.
திருமணம் செய்யாமல் கணவன், மனைவி போல் வாழ்ந்தோம். கோவாவில் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்த பின், உக்ரைன் சென்றோம்.
அந்த நேரத்தில் கொரோனா ஊரடங்கு வந்தது. 2021ல் மீண்டும் கோவா வந்தோம்.
ரூ.3.50 லட்சம்
இந்த காலகட்டத்தில் எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. நீனாவின் இரு மகன்களில் ஒருவர் ரஷ்யாவில் உள்ளார்.
இன்னொருவர் இறந்துவிட்டதாக நீனா கூறுகிறார். அதுபற்றி எனக்கு சரியாக தெரியவில்லை. ஆறு மாதங்கள் மட்டுமே இந்தியாவில் வசிக்கும் விசா என்னிடம் இருந்தது.
இதனால், கோவாவில் சொகுசு வசதியுடன் ஒரு வீட்டை வாடகை எடுத்து, நீனா, இரண்டு குழந்தைகளை தங்க வைத்தேன்.
இந்திய ரூபாயில் மாதம் 3.50 லட்சம் ரூபாய் கொடுத்தேன். 'கோவாவில் வசிக்க வேண்டும். இல்லாவிட்டால் எங்களுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது' என, நீனா எனக்கு கட்டுப்பாடு விதித்தார்.
என்னால் இங்கு ஆறு மாதங்களுக்கு மேல் தங்க முடியாத நிலை உள்ளது.
நல்ல தந்தை
என் மகள்களுடன் நேரம் செலவழிக்க நீனா விடவில்லை. சில மாதங்களுக்கு முன்பு குழந்தைகளுடன், கோவாவை விட்டு நீனா வெளியேறியது தெரிந்தது.
இதுபற்றி கோவா போலீசில் புகார் செய்தேன். தற்போது கிடைத்த தகவலால் இங்கு வந்துள்ளேன். என் குழந்தைகளை இந்திய அரசு, ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கக் கூடாது.
அவர்கள் அங்கு சென்றால், நான் அவர்களை பார்ப்பது கடினமாகி விடும். அவர்களுக்கு நல்ல கல்வி தேவை. அவர்களுக்கு தேவையான வாழ்க்கையை வழங்க நான் தயாராக உள்ளேன்.
என் குழந்தைகளை ரஷ்யாவுக்கு அனுப்ப விடாமல் தடுக்க, என்னால் முடிந்த முயற்சிகளை எடுப்பேன்.
அவர்களுக்கு நல்ல தந்தையாக இருக்க ஆசைப்படுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.