/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ராஜண்ணா பதவி நீக்கம் சதீஷ் ஜார்கிஹோளி கருத்து
/
ராஜண்ணா பதவி நீக்கம் சதீஷ் ஜார்கிஹோளி கருத்து
ADDED : ஆக 12, 2025 11:22 PM

பெங்களூரு: ''அரசியலில் ஒருவர் மீது ஒருவருக்கு, பகைமை உள்ளது. நாங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,'' என, மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
அமைச்சர் பதவியில் இருந்து ராஜண்ணாவை நீக்கியது, காங்கிரஸ் மேலிடத்தின் முடிவாகும். இது பற்றி ராஜண்ணாவே தெளிவுப்படுத்தி உள்ளார். மேலிடத்தை சந்திக்க டில்லிக்கு செல்ல முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். தனக்கு எதிராக சதி நடந்துள்ளதாக, குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் டில்லிக்கு சென்று, மேலிட தலைவர்களுடன் பேசுவார். இது குறித்து, அதிகம் பேச விரும்பவில்லை. ராஜண்ணாவிடம் ராஜினாமா பெற்றதை, அச்சமுதாயத்துக்கு நடத்த மோசடி என, கூற முடியாது. ராஜினாமாவுக்கான காரணம் என்ன என்பதை, வரும் நாட்களில் விவரிப்பதாக அவர் கூறியுள்ளார். விரைவில் அனைத்தும் சரியாகும் என நம்புகிறோம்.
அரசியலில் ஒருவர் மீது ஒருவருக்கு பகைமை உள்ளது; எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ராஜினாமா விஷயம், எங்கள் கட்சி சம்பந்தப்பட்ட விஷயம். இது பற்றி எதிர்க்கட்சியினர் எதற்காக பேசுகின்றனர்?
அரசியலில், 'செட்டில்மென்ட் பாலிடிக்ஸ்' உட்பட அனைத்துமே இருக்கும். நாங்கள் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் இப்படித்தான் ஆகும். கட்சி மேலிடத்தின் மனதை கரைக்க ராஜண்ணா முயற்சிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.