/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாநில காங்., தலைவர் பதவியில் மாற்றம் நிகழாது என்கிறார் சதீஷ்
/
மாநில காங்., தலைவர் பதவியில் மாற்றம் நிகழாது என்கிறார் சதீஷ்
மாநில காங்., தலைவர் பதவியில் மாற்றம் நிகழாது என்கிறார் சதீஷ்
மாநில காங்., தலைவர் பதவியில் மாற்றம் நிகழாது என்கிறார் சதீஷ்
ADDED : ஏப் 09, 2025 07:45 AM

பாகல்கோட் : ''காங்கிரஸ் மாநில தலைவர் பதவியில் தற்போது எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை,'' என பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி கூறி உள்ளார்.
கர்நாடகாவில், சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இதில் முதல்வர் பதவி, கட்சியின் மாநில தலைவர் பதவி தொடர்பாக, அடிக்கடி விவாதங்கள் நடக்கின்றன.
இந்நிலையில், முதல்வர் பதவிக்கு ஆசைப்படும் துணை முதல்வர் சிவகுமார், மாநில தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க விருப்பம் இல்லாமல் உள்ளார். ஆனால், பல மூத்த அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும் மாநில தலைவர் பதவிக்காக முட்டி மோதுகின்றனர்.
இந்த வரிசையில் பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, தலைவர் பதவியை அடைவதில் மும்முரமாக செயல்பட்டு வருகிறார்.
மாநில தலைவர் பதவி குறித்து நேற்று முன்தினம் வெளிப்படையாக பதில் அளித்து உள்ளார். பாகல்கோட்டில் சதீஷ் ஜார்கிஹோளி அளித்த பேட்டி:
காங்கிரஸ் மாநில தலைவர் பதவிக்கான போட்டியில் நான் உட்பட பலரும் காத்திருக்கிறோம். ஆனால், தலைவர் பதவியில் தற்போது எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை.
தலைவர் பதவி குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் உயர்மட்ட குழுவிடமே உள்ளது. சரியான நேரமும், சூழலும் அமைந்த பிறகு மாற்றம் உண்டாகும்.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
எனவே, இதற்கு எதிராக பா.ஜ., போராட்டம் நடத்துவது சரியல்ல. விவசாயிகளின் நலனுக்காக தான், பால் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.